இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான எக்ஸ் தள கணக்குகள் நீக்கம்

Feb 18, 2024 - 15:34
 0  1
இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான எக்ஸ் தள கணக்குகள் நீக்கம்

இந்தியாவில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் 2 லட்சத்துக்கும் அதிகமான எக்ஸ் தள கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2023 டிசம்பர் 26ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 25ஆம் தேதி வரையில் 2,31,215 எக்ஸ் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கின் தலைமையின் கீழ் மைக்ரோ-பிளாக்கிங் தளமான எக்ஸ் தளம், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் இந்தியாவில் 1945 கணக்குகளை முடக்கியது. இதை சேர்க்காமல், நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் சிறார் ஆபாசப் படங்கள் உள்ளிட்ட விதிமுறைகளை மீறிய விஷயங்களை பகிர்ந்த 2,31,215 எக்ஸ் கணக்குகளை நீக்கியுள்ளது.

AI தொழில்நுட்பத்தின் அட்டகாசமான பரிமாணம்.! Sora நிகழ்த்தும் அதிசய காட்சிகள்…  வெறுக்கத்தக்க வார்த்தைகள் மற்றும் புகைப்படங்கள், துஷ்பிரயோகம் தொடர்பான பதிவுகள் வெளியிட்ட கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, டெக் டிரான்ஸ்பரன்சி ப்ராஜெக்ட் (TTP) இன் புதிய அறிக்கையின்படி, அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட பயங்கரவாதக் குழு மற்றும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட சில அமைப்புகளின் இரண்டு தலைவர்களுக்கான பிரீமியம், கட்டணச் சேவைகளை எக்ஸ் தளம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow