HBDYuvan: டாப் இயக்குனர்கள்.. டாப் நடிகர்கள் வேண்டாம்..! என்றும் இசை உலகில் 'இளைஞர்களின் ராஜா' யுவன்.!

Aug 31, 2023 - 05:21
 0  2
HBDYuvan: டாப் இயக்குனர்கள்.. டாப் நடிகர்கள் வேண்டாம்..! என்றும் இசை உலகில் 'இளைஞர்களின் ராஜா' யுவன்.!

காதலை வரவழைக்கும் ரகமாக இருந்தாலும் சரி, ஒரு சோக ராகமாகா இருந்தாலும் சரி அனைவர்க்கும் பிடித்து மனதில் படியும் படி பாடல்களை இசையமைத்து கொடுப்பதில் வல்லவர் என்றால் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்று சொல்லலாம். 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் தன்னுடைய இசையால் ஒரு தாக்கத்தை உண்டு செய்தவரும் அவர் தான். யுவனும் நா,முத்துக்குமாரும் இணைந்து கொடுத்த பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாதவதாக இருக்கும் என்பதில் எந்த சந்தகேமும் இல்லை.

யுவன் இசைஞானி இளையராஜாவின் மகன் என்பது அனைவர்க்கும் தெரியும். அவர் முன்னணி இசையமைப்பாளராக இருந்த காலத்திலே அதாவது தன்னுடைய 16 வயதில் அரவிந்தன் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா அறிமுகமானார். அந்த படத்தின் பாடல்கள் அருமையாக இருந்தாலும் கூட அந்த சமயத்தில் சரியான ஒரு வரவேற்பு கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் யுவன் இசையமைக்கும் பாடல்கள் தனது தந்தை இளையராஜா சாயலில் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.

சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த யுவனுக்கு அஜித்தின் தீனா படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டு தரமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கொடுத்தார். அந்த படத்தை தொடர்ந்து யுவன் காட்டில் மழை தான் என்கிற அளவிற்கு தொடர்ச்சியாக அவருக்கு பல படங்களில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அவருடைய இசையில் வெளிவந்த நந்தா, துள்ளுவதோ இளமை, மௌனம் பேசியதே, காதல் கொண்டேன், 7 ஜி ரேம்போ காலனி உள்ளிட்ட படங்களின் ஆல்பம் பெரிய அளவில் ஹிட் ஆனது.

கிட்டத்தட்ட 2001-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆம் ஆண்டு வரை வெளியான பல ஹிட் படங்களுக்கு யுவன் தான் இசையமைத்திருந்தார். பிறகும் சில ஆண்டுகளாக இசையமைக்காமல் இருந்த யுவன் தர்மதுரை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இப்போதும் உள்ள இளைஞர்களுக்கும் பிடித்ததை போல, மனதுக்கு நெருக்கமான பாடல்களை யுவன் கொடுத்து வருகிறார், யுவன் இதுவரை தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் ஒரு படங்களுக்கு கூட இசையமைத்தது இல்லை.

அதைப்போல, முன்னணி இயக்குனர்களாக இருக்கும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படத்திற்கும் மணிரத்தினத்தின் படத்திற்கும் யுவன் இசையமைத்தது இல்லை. இருப்பினும் 170 படங்களுக்கு மேல் இசையமைத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். பெரிய விருதுகள் பெரிய இயக்குனர்களுடன் அவர் பணியாற்ற வில்லை என்றாலும் கூட ஒரு நடிகருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை கைக்குள் வைத்திருப்பவர் யுவன் சங்கர் ராஜா.

இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow