அறிமுக போட்டியில் வரலாறு சாதனை படைத்த தமிழக வீரர் சாய் சுதர்சன்..!

Dec 17, 2023 - 14:30
 0  0
அறிமுக போட்டியில் வரலாறு சாதனை படைத்த தமிழக வீரர் சாய் சுதர்சன்..!

இன்று நடந்த ஒரு நாள் போட்டியில் சாய் சுதர்சன் அறிமுகமானார். இவர் தனது முதல் சர்வதேச போட்டியில் அற்புதமாக விளையாடி அரைசதம் விளாசினார். தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 43 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 55* ரன்கள் எடுத்தார். அதில் ஒன்பது பவுண்டரிகள் அடித்தார்.

இதன்மூலம் இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி இந்திய தொடக்க வீரர்கள்  அறிமுகமான முதல் ஒரு நாள் போட்டியில் 50 ரன்னிற்கு மேல் எடுத்த வீரர் என்ற  பட்டியலில் சாய் சுதர்சன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

சாய் சுதர்சன் முன் இந்த சாதனையை ராபின் உத்தப்பா ,  கே.எல் ராகுல்,  ஃபைஸ் ஃபசல் படைத்துள்ளனர். அறிமுகமான முதல்  ஒரு நாள் போட்டியில்  இந்திய தொடக்க வீரர் கே.எல் ராகுல் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 100* ரன்கள் எடுத்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ராபின் உத்தப்பா 86 ரன்கள் எடுத்தார். அதேபோல கடந்த 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஃபைஸ் ஃபசல் ஆட்டமிழக்காமல் 55* ரன்கள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து இன்றைய அறிமுகமான முதல் ஒரு நாள் போட்டியில் தமிழக வீரர்  சாய் சுதர்சன் ஆட்டமிழக்காமல் 55* ரன்கள் எடுத்து இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் அறிமுகமான முதல் ஒரு நாள் போட்டியில்  அரைசதம் அடித்த 17 வது இந்திய  வீரர் என்ற சாதனையும் சாய் சுதர்சன் பெற்றுள்ளார்.

அறிமுக ஒருநாள் போட்டியில் 50+ ரன்கள் எடுத்த இந்திய தொடக்க வீரர்கள்: 86 - ராபின் உத்தப்பா vs இங்கிலாந்து , 2006 100* - கே.எல் ராகுல் vs ஜிம்பாப்வே , 2016 55* - ஃபைஸ் ஃபசல் vs ஜிம்பாப்வே , 2016 55* - சாய் சுதர்சன் vs தென்னாப்பிரிக்கா , 2023

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று  ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.  முதலில் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 116 ரன்கள் எடுத்தன. அடுத்து இறங்கிய இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டை  இழந்து  117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow