GDP: இந்தியாவின் GDP வளர்ச்சியானது மூன்றாம் காலாண்டில் 8.4% ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போதைய GDP வளர்ச்சியானது எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. GDP (gross domestic product) என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் அல்லது நாட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும். Read More – உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல் இதன் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரம் கணக்கிடப்படுகிறது. […]
SAFF U-19 பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. வங்காளதேசத்தில் நடந்த போட்டியில் நேபாளத்தை 4 – 0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணி வீராங்கனைகள் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்காத நிலையில் இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடினர். இதன் காரணமாக 4 கோல்களை விளாசி அசத்தினர். முக்கியமாக நேஹா மிகச்சிறப்பாக விளையாடினார். அவர் இரண்டு கோல்களையும், சுலஞ்சனா ரவுல் […]
1989ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சியில் விபி சிங் பிரதமராக இருந்த போது பிற்படுத்த பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை அளித்திடும் வகையில் கொண்டுவரப்பட்ட மண்டல் கமிஷனை அமல்படுத்தினார். இதன் மூலம் தான் தற்போது வ்ரையில் சாதிவாரி இடஒதுக்கீடு என்பது அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண்டல் கமிஷன் மூலம் சாதிவாரி இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக இந்தியாவில் அமல்படுத்திய மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்கிற்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முழு உருவ சிலையை தமிழக அரசு நிறுவியுள்ளது. […]
அடுத்த மாதம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் களமிறங்க பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. தேசிய கட்சிகள் இந்த சட்டமன்ற தேர்தலில் மாநில அரசியல் நிலவரம் கண்டு மாநில நிர்வாகிகள் கூற்றுப்படியே செயல்படும். இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒன்றுகூடிய இந்தியா (INDIA) கூட்டணியில் கூட சிறுது விரிசல் ஏற்பட்டுள்ளது. அதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய […]
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக 107 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 19 ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆனது கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. […]
2024 நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாஜக தலைமையில் அதன் ஆதரவு கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியான NDA அணியும், காங்கிரஸ், திமுக , திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ள I.N.D.I.A (இந்தியா) கூட்டணியும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போதுள்ள அரசியல் கள நிலவரத்தின் படி இரு கூட்டணிகளும் மக்கள் மத்தியில் சம அளவிலான கவனத்தை பெற்று வருவதால் வரும் நாடாளுமன்ற தேர்தல் […]
19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் 11வது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொடங்கிய இந்த போட்டியானது அக்.8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய அணியில் உள்ள 699 […]
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாலை விபத்துகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) கண்காணித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் நாட்டில் ‘ஹிட் அண்ட் ரன்’ பிரிவின் கீழ் மொத்தம் 52,448 சாலை விபத்துகள் நடந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற விபத்துகள் அதிகபட்சமாக எப்படி நடந்தன என்பதை MoRTH தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழுப் பகுப்பாய்வைப் பகிர்ந்துள்ளது. மக்களவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், […]
கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசி பார்முலாவை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு தரமாட்டோம் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது அசுர வேகத்தில் பரவி வருகிறது.இதனால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகிறது. மேலும், கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே,கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த அனைத்து நாடுகளும் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. எனினும்,கொரோனா தடுப்பு மருந்துகள் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும்,தற்போது பயன்படுத்தப்படும் […]