இனி வெளியாக உள்ள புதிய படங்களின் இந்த காட்சிக்கு தனி கட்டணம்!

தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என அறிவிக்கப்பட்டு, பின்னர் படக்குழுவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. சிறப்பு காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்க படுவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அதிக டிக்கெட் விலை, ஒரு காட்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு 2,3 காட்சிகளை திரையிடுகிறார்கள்” என்ற தொடர் குற்றச்சாட்டுகளால்தான் தீபாவளிக்கு … Read more

தமிழ் தூதுவர் ஆகிறார் கீர்த்தி சுரேஷ் : சென்னை ரிலையன்ஸ் ட்ரென்ஸ் அழைப்பு …!!!

ரிலையன்ஸ் டிரென்ஷின் தமிழக தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்படும் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஆகுஷ்டி 23ஆம் தேதி காலை 11:30 மணிக்கு ரிலையன்ஸ் டிரென்ஸ் சார்பில் செய்தியாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சென்னை அண்ணா நகரில் வி.ஆர் மாலில் உள்ள ரிலையன்ஸ் டிரென்சில் நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மண்டலத்துக்கு தூதுவராக ‘கீர்த்தி சுரேஷி அறிவிக்கப்பட உள்ளார். இந்நிகழ்ச்சியில் டிரென்ஷின் தலைமை செயல் அதிகாரி விபின் தியாகி கலந்து … Read more

அஜித் ரசிகை செய்த செயலை பாருங்கள்!!

சமீப காலங்களில் கிகி சேலஞ்ச்  என்னும்  நடனம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்த பழக்கம் தற்போது தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளது. கிகி நடனம் ஆடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.ஆனாலும் இதனை மக்கள் செய்து வருகின்றனர். கிகி நடனம் என்பது ஓடிக்கொண்டிருக்கும் காரில் இருந்து இரங்கி நடு  ரேட்டில் நடனம் ஆடுவது ஆகும்.தபோது வரை இந்த நடனம் ஒரு ஆங்கில பாடலுக்கு மட்டுமே ஆடப்பட்டு  வந்தது. ஆனால் தற்போது அஜித் ரசிகை ஒருவர் … Read more

மார்ச் 22- இன்று தமிழ் திரைப்படத்துறையில் காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் நினைவு நாள்…!!

மார்ச் 22- இன்று தமிழ் திரைப்படத்துறையில் காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் நினைவு நாள். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகிய தோற்றத்தாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார்.. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழிகளிலும் நடித்துள்ள … Read more

ஸ்பெஷலாக நடைபெறும் விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பு-கோபத்தில் இயக்குனர்

விஜய் தற்போது துப்பாக்கி,கத்தியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது சினிமாவை சார்ந்த அனைவரும் ஸ்ட்ரைக்கில் இருக்கும் போது, விஜய் படம் மட்டும் விக்டோரியா ஹாலில் ஸ்பெஷல் அனுமதி வாங்கி எடுக்கப்பட்டு வருகின்றதாம். இதனையறிந்த இயக்குனர் வெங்கடேஷ் ‘ஸ்ட்ரைக்கில் கூட பாகுபாடா’ என்று கோபமடைந்துள்ளார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவினையும் அவர் செய்துள்ளார். இயக்குனர் வெங்கடேஷ் ‘பகவதி’, ‘சாக்லேட்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்,அதுபோல அங்காடி தெரு படத்தில் துணிக்கடை … Read more

தல அஜீத்தின் ‘விசுவாசம்’ படத்தில் இணைந்த பிரபல கிட்டார் இசைக்கலைஞர்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடிந்தவுடன் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கும் டி.இமான் அவரது இசை பணியை துவக்கி விறுவிறுப்பாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், பிரபல கிட்டார் இசைக்கலைஞரான கெபா ஜெரோமியா ‘விஸ்வாசம்’ படத்திற்காக சில டியூன்களை தயார் செய்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரேயா திருமணம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ஸ்ரேயா மற்றும் ஆண்ட்ரே கோஷ்சீ திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ரஜினி,அஜீத்,விஜய்,விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயாவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்று ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக செய்தி பரவி வந்தது. நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னீஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்துகொண்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், அவரது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை.   … Read more

கீர்த்தி சுரேஷிற்கு டப்பிங் பேசும் பிரபல நடிகை…!!

நடிகை பானுப்ரியா தற்போது படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும், சின்னத்திரையில் சில வேடங்களை ஏற்றும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் நடிகைகளுக்கு டப்பிங்’கும் பேசி வருகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்த வகையில், தற்போது அப்படியொரு வாய்ப்பை ஏற்றிருக்கிறார். பழம்பெரும் நடிகை சாவித்ரி வாழ்க்கை படம், ‘நடிகையர் திலகம்’ பெயரில் உருவாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கிறார். மேலும் விஜய் தேவர கொண்டா, துல்கர் சல்மான், நாக சைதன்யா, பிரகாஷ் … Read more

பிரபுதேவாவின் “மெர்குரி” பட பாடல் வீடியோ வெளியானது…!!

“பிட்சா” படப்புகழ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நடிகர் பிரபுதேவா நடித்து வெளிவரும் திரைப்படம் “மெர்குரி”. சைலன்ட் த்ரில்லராக உருவாயுள்ள இந்த படத்தில், ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தினை தயாரித்து ஒளிப்பதிவும் செய்துள்ளார்.இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் இசையில் அனைத்து பாடல்களும் உருவாகியுள்ளது . இதையடுத்து இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இன்று இப்படத்தின் … Read more

தமிழ்கன்,  தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட மேலும் 28 இணையதளங்களை முடக்கியது காவல்துறை…!!

தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது சமீபத்தில் காவல்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்கன்,  தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் இதுவரையில் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பின்னர் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் புதிய தமிழ்திரைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்த மேலும் 28 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. tamilrockers,tamilmvfun என்ற பெயரில் செயல்பட்டு வந்த இணையதளங்கள் முடக்கப்பட்டன.