இனி வெளியாக உள்ள புதிய படங்களின் இந்த காட்சிக்கு தனி கட்டணம்!

தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என அறிவிக்கப்பட்டு, பின்னர் படக்குழுவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சிறப்பு காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்க படுவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அதிக டிக்கெட் விலை, ஒரு காட்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு 2,3 காட்சிகளை திரையிடுகிறார்கள்” என்ற தொடர் குற்றச்சாட்டுகளால்தான் தீபாவளிக்கு சிறப்புக்காட்சிக்கு அனுமதி இல்லையென கூறினோம். பின் பொதுமக்கள், ரசிகர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு காட்சிக்கு மட்டும் ஒரு நாள் அனுமதி அளித்தோம். ‘ என கூறியிருந்தார்.
மேலும்,  ‘ இனிமேல் சிறப்புக்காட்சிகளுக்கு அரசே ஒரு கட்டணத்தை நிர்ணயித்து, அது வெளிப்படையாக மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டு அந்த கட்டணத்தை தான் வாங்க வேண்டுமென கூறியிருக்கின்றோம்.’ எனவும் பதிவிட்டுள்ளார்.
இதனால், இனி சிறப்பு காட்சிகளுக்கும் அரசே கட்டத்தை நிர்ணயம் செய்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.