தல அஜீத்தின் ‘விசுவாசம்’ படத்தில் இணைந்த பிரபல கிட்டார் இசைக்கலைஞர்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடிந்தவுடன் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கும் டி.இமான் அவரது இசை பணியை துவக்கி விறுவிறுப்பாக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், பிரபல கிட்டார் இசைக்கலைஞரான கெபா ஜெரோமியா ‘விஸ்வாசம்’ படத்திற்காக சில டியூன்களை தயார் செய்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மோத இருக்கும் தல தளபதி

தல தளபதி போட்டி கடைசியாக 2012 ம் ஆண்டு நிகழ்ந்தது.பொங்கலுக்கு அஜித் நடித்த வீரம் படமும் விஜய் நடித்த ஜில்லா படமும் ரிலீஸானது. இரண்டு படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை தேடி தந்தது. அஜித்தின் “விசுவாசம்” படத்தின் படபிடிப்பானது ஜனவரி மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்க உள்ளது.அதுபோலவே தளபதி விஜய் நடிக்க இருக்கும் 62வது படத்தின் படபிடிப்பு கூட ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்க உள்ளதாம். தளபதி62 இயக்குனர் முருகதாஸ் தீபாவளி விருந்தாக படம் வரும் என உறுதியாக தெரிவித்து இருந்தார்.இப்போது “விசுவாசம்” படக்குழுவும் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். … Read more