அமேசான் வைத்த ஆப்பு?தமிழ் ராக்கர்ஸ் நிரந்தர முடக்கம்?

பிரபல பைரசி வலைதளமான தமிழ் ராக்கர்ஸ் வலைதளம் இனி இயங்காது என்று அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் வலைதளமானது முறைகேடாக தமிழ் படங்களை பதிவேற்றம் செய்து வந்தது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் வலைதளம் மீது அமேசான் நிறுவனம் அடுக்கடுக்கான புகார்களை  அளித்தது. அடுத்தடுத்தடுத்து வந்த புகார்களின் அடிப்படையில்அமெரிக்க நிறுவமனா ICANN தமிழ் ராக்கர்ஸை நிரந்தரமாக முடக்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இனி தமிழ் ராக்கர்ஸ் வலைதளம் இயங்காது.தமிழ் ராக்கர்ஸ் வலைதள முடக்கம் தொடர்பாக பல நெட்டிசன்கள் … Read more

தமிழ் ராக்கர்ஸ் இணைத்தளத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் !

தமிழ் ராக்கர்ஸ் இணைத்தளங்களில் புதியதாக வரும் திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதால் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் என்ன தான் முயற்சி செய்தலும் அதற்கான பலன் இல்லை.சமீபத்தில் வெளியான தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டனர். இந்நிலையில் அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் ஒன்றை  தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தாங்கள் தயாரிக்கும்  திரைப்படங்கள் … Read more

எவ்வளோ சொன்னாலும் இவங்கள திருத்த முடியாது! தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியான என்.ஜி.கே திரைப்படம்! அதிர்ச்சியில் படக்குழுவினர்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.  இந்நிலையில்,நேற்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தை இணையத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் தமிழராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் ராக்கர்ஸின் இந்த செயல் படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

எங்கிருக்கிறது..? அட்மின் யார்…? URL என்ன..? தமிழ் சினிமாவை நடுங்க செய்யும் தமிழ்ராக்கர்ஸ்….

தமிழ்சினிமா உலகையே நடுங்க வைக்கும் தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றி பார்ப்போம். தமிழ் சினிமா பிரபலங்களை நடுங்கவைத்து கொண்டு இருக்கும் தமிழ்ராக்கர்ஸ்  அடிக்கடி  சவால் விட்டு பெரிய நடிகர்களின் படங்களை கசியவிட்டு வருகிறது. தொலைதூரத்தில் இருந்து இயங்கும் இந்த இணையதளம்  மிகவும் தெளிவான காட்சிகளுடன் வீடியோக்களை வெளியிடுகிறது. இந்த இணையதளம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் வருமானத்தை கெடுக்கிறது. புதிய படங்கள் வெளியாகும் அன்று தியேட்டருக்கு சென்று ரூ120- 200 கொடுத்து பார்க்க விரும்பாதவர்களுக்கு  தமிழ்ராக்கர்ஸ் … Read more

அந்த அறிவிப்பு நாங்க போடல! 2.O ஆன்லைன் ரிலீஸில் பின்வாங்கியது தமிழ் ராக்கர்ஸ்!

தமிழ் சினிமாவிற்கு ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், பெரும் தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ். எந்தபடம் வந்தாலும் முதல் நாளில் இணையத்தில் படம் வெளியாகி விடுகிறது. இதனை தடுக்க நடிகர் சங்கம் , தயாரிப்பாளர் சங்கம் , தமிழக அரசு என அனைத்தும் போராடி வந்தாலும் இதனை தடுத்த பாடில்லை.  தற்போது தீபாவளியன்று வெளியான சர்கார் படத்தை கூட இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதனை தொடர்ந்து நவம்பர் 29ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் … Read more

எந்த சமூக வலைதளத்திலும் நாங்கள் இல்லை…!அடித்து கூறும் தமிழ் ராக்கர்ஸ்

எந்த சமூக வலைதளத்திலும் தாங்கள் இல்லை என்று தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்  தெரிவித்துள்ளது.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கரின் பிரமாண்ட பொருட்செலவில் தயராகி உள்ள படம்  2.0 ஆகும். இந்நிலையில் படம் வருகின்ற நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது.தற்போது  2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று  தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில்  மிரட்டல் விடுத்தது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தில் இது தொடர்பாக கருத்து ஓன்று பதிவிடப்பட்டுள்ளது.அதில்  அந்த ட்விட்டர் பக்கம் தங்களுடையது அல்ல .டுவிட்டர் … Read more

சர்காருக்கு ராக்கர்ஸ் சவால்………?முறியடிக்குமா சர்கார்…..என்னடா இது சர்காருக்கு வந்த சோதனை..எத்தன…!!

நடிகர் விஜயின் சர்கார் படத்தை  இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டரில் துணிச்சலான சவால் விடுத்துள்ளனர்.நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி உள்ள படம் சர்கார். படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார், நகைச்சுவை நடிகர் யோகிபாபு,பழ.கருப்பையா , ராதாரவி என நடிக பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் சர்கார் தீபாவளியன்று திரைக்கு வர இருக்கிறது. சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிட … Read more

இதையும் விட்டு வைக்கவில்லையா தமிழ்ராக்கர்ஸ்?! அதிர்ச்சியில் சர்கார் படக்குழு!!

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது சினிமா பைரஸி தான். குறிப்பிட்டு சொன்னால் தமிழ்ராக்கர்ஸ் தான். படம் திரையில் வெளியான அன்றே படம் திருட்டுதனமாக இணையத்தில் வெளியாகி விடுகிறது. இதனை தடுக்க பல வழிகளை கையாண்டும், இன்னும் எதும் தடுக்கபடவில்லை. இந்த இணையதிருட்டு கும்பல் எப்போதும் படங்களைதான் திருடி வெளியிடுவார்கள். ஆனால் தற்போது காந்தி ஜெயந்தியன்று தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் இசைவெளியீட்டு விழா  முழுவதையும் பதிவேறாறி விட்டனர். இதனைகண்டு படக்குழு … Read more

காலா படத்தை ரிலீசுக்கு முன்பே வெளியிடுவோம்: தமிழ் ராக்கர்ஸ் அதிரடி ..!

இயக்குநர் பா.ரஞ்சித் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் காலா படத்தில் ரஜினிகாந்துடன் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ் என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 7-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் காலா படத்தின் 2-வது ட்ரெய்லரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்த ட்ரெய்லரை சமூக வலைதளமான யூடியூப் பக்கத்தில் சில நிமிடங்களிலே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்ததால் தொடர்ந்து … Read more

தமிழ்கன்,  தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட மேலும் 28 இணையதளங்களை முடக்கியது காவல்துறை…!!

தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது சமீபத்தில் காவல்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்கன்,  தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்கள் இதுவரையில் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பின்னர் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் புதிய தமிழ்திரைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்த மேலும் 28 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. tamilrockers,tamilmvfun என்ற பெயரில் செயல்பட்டு வந்த இணையதளங்கள் முடக்கப்பட்டன.