தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை.!

Tamilnadu School Students

தமிழகம் முழுவதும் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்தது. சமீபத்திய கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நநடைபெற்று வந்த அரையாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பெறுவதால், நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை விடப்படுகிறது. அதன்படி, அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து, நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்தும், ஜனவரி … Read more

2022இல் அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலம்.! இரண்டாம் இடத்தில் தமிழகம்.! முதல் இடம்.?

அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலத்தின் லிஸ்ட்டில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளது. தெருநாய்களின் தொல்லை இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் அதிகமாக இருக்கிறது. இரவில் தனியாக செல்வோருக்கு பல சமயம் தொந்தரவாகவும், பயமுறுத்தும் வண்ணமும் இருக்கிறது. இப்படி இந்த 2022ஆம் ஆண்டு அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலத்தின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில், முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு  3,46,318 மருத்துவ வழக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாம் இடத்தில் 3,30,264 மருத்துவ வழக்குகளுடன் தமிழகம் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் … Read more

போலி பில்.. கடும் நடவடிக்கை.! ரேஷன் ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை எச்சரிக்கை.!

ரேஷன் பொருட்கள் வாங்காமல் வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை – கூட்டுறவுத்துறை எச்சரிக்கை. தற்போது, தமிழக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் என்னென்ன ரேஷன் பொருட்கள் வாங்குகிறார்களோ அதற்கான விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக குடும்ப தலைவர் செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும். ஆனால்,  ஒரு சில குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்காமலே வாங்கியதாக குறுஞ்செய்தி செல்கிறது என அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. இனி அவ்வாறு புகார்கள் வந்து நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் … Read more

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் – ₹ 1.41 கோடி அபராதம்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தபட்ட 10 நாட்களில், சென்னையில் ₹.1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு திருத்தங்களுடன் மோட்டார் வாகன சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இது குறித்து சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வந்தனர். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அக்டோபர் 26 தேதி அமல்படுத்தபட்டது. சென்னையில், இச்சட்டம் நடைமுறைக்கு வந்த 10 நாட்களில், 17,453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 1.41 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதில் … Read more

ஆளுநருக்கு Go back : திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு.!

   தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களை திரும்ப பெறும் கோரிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.       தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் சமீபத்திய செயல்பாடுகள் ஆளுங்கட்சியான திமுக மற்றும் சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கபட்டுவருகிறது. அவரது கருத்துகள் குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே  ஆதரவாக உள்ளதாகவும்தாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் அண்மையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுருந்தனர்.   … Read more

வள்ளலார் 200வது பிறந்தநாள்.! தபால் உறையை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.! 

வள்ளலார் 200வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் வள்ளலார் தபால் உறையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  வள்ளலார் 200வது பிறந்தநாள் விழா, வள்ளலார் தர்மசாலை ஆரம்பித்த 156வது ஆண்டு, வள்ளலார் ஜோதி தரிசனம் காண்பித்த 152வது ஆண்டு ஆகியவற்றினை முன்னிட்டு முப்பெரும் விழா இன்று கொண்டாடப்டுகிறது. இந்த முப்பெரும் விழாவானது சென்னை கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள் கோவில் மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது . இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் … Read more

1,47,686 கோடி வரி வசூல்.! நடப்பாண்டில் 7வது முறையாக ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு.!

கடந்த வருத்தத்தோடு ஒப்பிடுகையில், சென்ற மாதம் ஜிஎஸ்டி வசூல் இந்தியாவில் 26 சதவீதமும், தமிழக அளவில் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.   செப்டம்பர் மாத வரையிலான கடந்த மாத ஜிஎஸ்டி வரி வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நடப்பு ஆண்டில் 7வது முறையாக ஒரு மாத கால ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஜிஎஸ்டி வரி 1,47,686 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், … Read more

திருமணத்தை நிறுத்த காதலனை அழைத்த மணப்பெண்!! தாலி கட்ட முயன்ற காதலன்!!

இன்று காலை திருமணம் நடக்கவிருந்த நிலையில் காதலி தன் திருமணத்தை நிறுத்தி, தன்னை அழைத்துச் செல்லும்படி காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. காலையில் திருமண மண்டபத்தை அடைந்த 24 வயது காதலன், மேடையில் நுழைந்து, மாப்பிள்ளையிடம் இருந்து தாலியை பறித்து, மணப்பெண்ணின் கழுத்தில் கட்ட முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் இளைஞனை தடுத்து நிறுத்தி தாக்கினர். இச்சம்பவம் சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது, சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் வரவழைக்கப்பட்டனர். விசாரணையில் அந்த இளைஞனும் மணப்பெண்ணும் ஒன்றாக … Read more

தக்காளி விலை கிடுகிடு உயர்வு… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.! ஒரு கிலோ 40, 42.!

தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்து வருகிறது. தக்காளி விளைச்சல் குறைவு காரணமாக, அதன் விலை வெளிச்சந்தைகளில் உயர்ந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் பகுதி விவசாயிகளிடம் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து, பண்ணை பசுமை கடைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகிறது.  அதன்படி, சென்னை, பண்ணை பசுமை கடைகளில் தக்காளி ஒருகிலோ 40 முதல் … Read more

செப்-4ம் தேதி திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள்… தமிழக அரசு அறிவிப்பு.!

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் சிறப்புடன் நடைபெற உள்ளது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் விழாவில் பங்கேற்று விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றுவார்கள். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் … Read more