பொங்கல் பரிசு – ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை!

tn ration shop

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, 2024 பொங்கல் பரிசு வழங்கிய சிறப்பு பணிக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 பைசா கணக்கிடப்பட்டு வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை ரேஷன் கடை பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் வரவு … Read more

போலி பில்.. கடும் நடவடிக்கை.! ரேஷன் ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை எச்சரிக்கை.!

ரேஷன் பொருட்கள் வாங்காமல் வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை – கூட்டுறவுத்துறை எச்சரிக்கை. தற்போது, தமிழக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் என்னென்ன ரேஷன் பொருட்கள் வாங்குகிறார்களோ அதற்கான விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக குடும்ப தலைவர் செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும். ஆனால்,  ஒரு சில குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்காமலே வாங்கியதாக குறுஞ்செய்தி செல்கிறது என அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. இனி அவ்வாறு புகார்கள் வந்து நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் … Read more

15 ரேஷன் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு அதிரடி உத்தரவு..!

சென்னை மண்டலத்தில் 15 நியாய விலைக்கடைகளில் ஊழியர்கள் கையாடல் செய்தது தொடர்பாக 15 கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பில், பொது விநோயாக திட்டத்தில் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசியப் பண்டங்கள் விநியோகிக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படியே குடும்ப அட்டைதார்களுக்கு விரல்ரேகை பதிவு மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு … Read more

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு – தமிழக அரசு புதிய உத்தரவு!

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சனை எழுந்தாலும், பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், QR-ஐ ஸ்கேன் செய்தும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்தும், ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கைரேகை பதிவு செய்யும் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் தொடரும் நிலையில், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் … Read more

 நாளை வழக்கம்போல் ரேசன் கடைகள் இயங்கும்..!

தமிழ்நாட்டில் நாளை வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால்,  கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக்கடைகள் இயங்கவில்லை இதனால்,  தமிழ்நாட்டில் நாளை வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோக திட்டத்தின்கீழ் ஜனவரி 2022-ம் மாதத்திற்கான அத்தியாவசிய … Read more

நியாயவிலை கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு எடுத்து தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. … Read more

பொங்கல் சிறப்பு தொகுப்பு – ரேசன் கடைக்கு முதல்வர் திடீர் விசிட்!

சென்னை:ரேசன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து தீவுத்திடல் பகுதியில் முதல்வர் திடீர் ஆய்வு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,கடந்த  ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.அதன்படி,சென்னை தலைமை செயலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முதல்வர் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் அனைத்து ரேசன் … Read more

பொது விநியோகத் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு! – தமிழ்நாடு அரசு உத்தரவு

நியாய விலைக்கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு. தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மார்ச் மாதம் வரை அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நியாய விலைக்கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு #tngovt #TamilNadu pic.twitter.com/7Tdo8hdQ7a — Dinasuvadu … Read more

#BREAKING: ரேஷன் கடையில் மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு

மக்களை அலைக்கழிக்கும் ரேஷன் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை. நியாயவிலை கடையில் பொருட்கள் வாங்கவரும் குடும்ப அட்டைதார்களை அலைக்கழிக்கும் ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வயதானவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார் எழுந்த நிலையில், உணவுப்பொருள் வழங்கும் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, நியாயவிலை கடைகளுக்கு செல்ல முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர், இதற்கான உரிய படிவத்தை, அவரால் … Read more

ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.  கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ராஜேஷ் குமார் அவர்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிக மோசமாக இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இதனை அடுத்து இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், தமிழகத்தில் தற்போது 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 … Read more