நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்? – தமிழிசை விளக்கம்

Tamilisai Soundararajan

Tamilisai Soundararajan: ஆளுநர் பதவிகளை ஏன் ராஜினாமா செய்தேன் என்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை வகித்து வந்த தமிழிசை சௌந்தரராஜன், திடீரென தனது பதவிகளை ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக தமிழிசை தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும், பதவி ராஜினாமா குறித்து பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டது. இந்த சூழல், … Read more

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா!

Banwarilal Purohit

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பினார். அதுமட்டுமில்லாமல், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான சண்டிகரின் யூனியன் பிரதேசத்தின் (UT) நிர்வாகி பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்தார். இந்த எதிர்பாராத அறிவிப்பு இப்பகுதியின் எதிர்கால தலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்பு தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த … Read more

ஆளுநரை வைத்து அரசாங்கம் நடத்த நினைக்கிறார்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

mk stalin

திமுக கட்சியின் இரண்டாவது இளைஞரணி மாநாடு வரும் 21ம் தேதி சேலத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இளைஞரணி மாநாட்டிற்கான சுடர் ஓட்டத்தை இன்று சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், கழக தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதான். 1982-ஆம் ஆண்டு … Read more

அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஆளுநர் ஒப்புதல்..!

சொத்து குவிப்பு வழக்கில் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் தலா மூன்றாண்டு சிறை  தண்டனையும், தலா 50 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும்,  சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி 30 நாட்களுக்குள் சரணடைய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவகாசம் வழங்கினார். பொன்முடிக்கு  மூன்று ஆண்டுகள் சிறை  தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர், எம்.எல்.ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர் … Read more

ஆளுநருக்கு Go back : திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு.!

   தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களை திரும்ப பெறும் கோரிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.       தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் சமீபத்திய செயல்பாடுகள் ஆளுங்கட்சியான திமுக மற்றும் சமூக ஆர்வலர்களால் விமர்சிக்கபட்டுவருகிறது. அவரது கருத்துகள் குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமே  ஆதரவாக உள்ளதாகவும்தாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் அண்மையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுருந்தனர்.   … Read more

ஆளுநர் பதவி விலக வேண்டும் திமுக கூட்டணி கட்சிகள் அறிக்கை

பெரிய பதவியை எதிர்பார்த்து பாஜகவை மகிழ்விக்க எண்ணி , அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக இருந்தால், ஆளுநர் பதவி விலக வேண்டும் என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். திமுக. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் ஆளுநரின் செயல்பாடு குறித்து விமசித்து கூட்டாக … Read more

“ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு ஒப்புதல் – பஞ்சாப் முதல்வர் ட்வீட்!

ஒரு எம்எல்ஏ-ஒரு ஓய்வூதியம் மசோதாவுக்கு பஞ்சாப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு எம்எல்ஏ – ஒரு ஓய்வூதியம்” மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதை பஞ்சாபியர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் பெருமளவு மிச்சமாகும் என … Read more

#JustNow: ஆளுநரை ரஜினி சந்தித்ததில் என்ன தவறு? – அண்ணாமலை

ரஜினியிடம் ஆளுநர் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என அண்ணாமலை கேள்வி. சென்னை நீலாங்கரையில் தேசிய கொடியுடன் கடலில் பயணம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உணர்ச்சிபூர்வமாக தன்னுடைய நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை பெருமிதமாக கொண்டாடுவதற்காக தேசிய கொடியை நமது இல்லத்தில் ஏற்றுகின்றோம். ஜம்மு காஷ்மீரில் நெய்யப்பட்ட தேசிய கொடி தான் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் ஏற்றவுள்ளோம். இதுபோன்று ஒவ்வொரு விஷயத்தையும் பல இந்தியர்கள் … Read more

#Breaking: பாஜக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு !

மேற்கு வங்க ஆளுநரான ஜக்தீப் தன்கர், துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு இறுதி செய்யப்பட்டது.

பாஸ்போர்ட் ஊழல்.. ஆளுநரிடம் அறிக்கை தர உள்ளோம் – அண்ணாமலை

பாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது அறிக்கையை ஆதாரப்பூர்வமாக தர உள்ளோம் என அண்ணாமலை அறிவிப்பு. பாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது அறிக்கையை வரும் 21-ஆம் தேதி தமிழக ஆளுநரிடம் வழங்க உள்ளோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஸ்போர்ட் ஊழலில் நடைபெற்ற முறைகேடுகள் என்ன என்பதை தெரிவிக்க உள்ளோம். இதுதொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை, இதனால் ஆளுநரை சந்தித்து பாஸ்போர்ட் ஊழல் தொடர்பான இரண்டாவது … Read more