மாண்டஸ் புயல் பாதிப்பு.! முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு.! 

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட தென் சென்னை பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு மரங்கள் வீழ்ந்தன. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல்  300க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் … Read more

அனைத்துக்கட்சி கூட்டம்.! இபிஎஸ்க்கு அழைப்பு.. ஓபிஎஸ்க்கு அழைப்பு இல்லை.! ஜெயக்குமார் விமர்சனம்.!

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் இபிஎஸிற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஓபிஎஸிற்கு அழைப்பில்லை. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.  இந்தியா தலைமையில் இந்த வருடம் நடைபெறும் ஜி20 மாநாடு பற்றி கலந்தாலோசனை செய்வதற்கு இந்தியா முழுவதும் உள்ள பிரதான கட்சிகளுக்கு அழைப்பு விளக்கப்பட்டது. இந்த அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் திமுகவுக்கு அழைப்பு வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள … Read more

பெரம்பலூர் முதல் தொழிற்பூங்காவை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.! 4800 பேருக்கு வேலைவாய்ப்பு.!

பெரம்பலூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்சாலை துவக்க பணிகளை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி, பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில், காலையில் திருச்சி, காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை … Read more

இன்றும் நாளையும் தமிழக முதல்வரின் பயண விவரம் இதுதான்.! 3 மாவாட்ட சூறாவளி பயணம்….

இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்று அங்கு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார்.  இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்று அங்கு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்று, அங்கு காட்டூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ … Read more

அனைத்து தொழில் நிறுவனங்களையும் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.! முதல்வர் பெருமிதம்.!

இன்று ஜவுளித்துறை கருத்தரங்கு நடைபெற்றது. அதில், முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் கலந்துகொண்டார்.  மத்திய அரசின் ஜவுளி துறை மற்றும் தமிழக அரசின் ஜவுளி துறை இணைந்து இன்று சென்னையில் தொழில் முனைவோர் கருதரங்கு நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டார். அதில் பேசுகையில், ஜவுளி நகரம் சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணியாற்றி வரும் நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும். … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை 2000 ரூபாய்.. திருமண உதவிதொகை இனி ரொக்கம்.! முதல்வர் அறிவிப்பு.!

சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார்.  மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழக அரசு மேற்கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வி , உயர்கல்வி முதன்மை செயலாளர்கள் உள்ளிட்ட 12 துறைகளின் முதன்மை செயலாளர்கள் கலந்துகொண்டனர். முதல்வர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சி என்பது ஓர் துறை சார்ந்த … Read more

தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகள்… அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்.!

தமிழகத்தில் 55 சதவீதத்திற்கும் அதிகமாக மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அவர்கள் பிழைப்புக்காக நகர்ப்பகுதிகளுக்கு சென்று விட கூடாது என நகரங்களுக்கு இணையாக கிராமத்தில் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. – அமைச்சர் பெரிய கருப்பன். பணிச்சுமை உள்ளிட்ட 10 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் இன்றும் நாளையும் விடுப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 18,000 ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நடைபெறும் வேளையில், உள்ளாட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் … Read more

தனது சொந்த தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்… பல்வேறு நலதிட்டங்கள் தொடக்கம்.!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து வருகிறார். இதில் முதற்கட்டமாக, பந்தற்காட்ர்ன் பகுதியில் மாநகராட்சி பள்ளியில் 4.37 கோடி மதிப்பீட்டில் பள்ளி மைதானம் அடிக்கல் நட்டுதல், பள்ளி கட்டடம் சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி உள்ளார். மேலும்,  மாணவர்களுக்கு நலத்திட்டங்கள், … Read more

கிராமப்புற வளர்ச்சி மிக முக்கியம்.! அதில் சிறப்பு கவனம் தேவை.! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.!

மாநில வாளர்ச்சியில் முக்கியம் கிராமப்புற வளர்ச்சி ஆகும். அதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் செயல்படுத்தபட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன. இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ மாநிலத்தின் பொருளாதார  வளர்ச்சி என்பது பொருளாதார குறியீடு மட்டும் இல்லை. மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கியது. … Read more

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை.! முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை.!

பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதே போல இந்தாண்டும் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தபட்டு வருகிறது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கதர்துறை அமைச்சர் காந்தி, … Read more