வள்ளலார் 200வது பிறந்தநாள்.! தபால் உறையை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.! 

வள்ளலார் 200வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் வள்ளலார் தபால் உறையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

வள்ளலார் 200வது பிறந்தநாள் விழா, வள்ளலார் தர்மசாலை ஆரம்பித்த 156வது ஆண்டு, வள்ளலார் ஜோதி தரிசனம் காண்பித்த 152வது ஆண்டு ஆகியவற்றினை முன்னிட்டு முப்பெரும் விழா இன்று கொண்டாடப்டுகிறது.

இந்த முப்பெரும் விழாவானது சென்னை கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள் கோவில் மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது . இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில், வள்ளலார் பற்றிய சிறப்பு உரை,  வள்ளலார் தபால் உறை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த விழாவில் தூய சன்மார்க்க அடிகளர்களுக்கு நினைவு பரிசும் வழங்க உள்ளார்.

வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த முப்பெரும் விழாவானது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 52 வாரங்கள் அடுத்த வருடம் அக்டோபர் வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment