போலி பில்.. கடும் நடவடிக்கை.! ரேஷன் ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை எச்சரிக்கை.!

ரேஷன் பொருட்கள் வாங்காமல் வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை – கூட்டுறவுத்துறை எச்சரிக்கை.

தற்போது, தமிழக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் என்னென்ன ரேஷன் பொருட்கள் வாங்குகிறார்களோ அதற்கான விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக குடும்ப தலைவர் செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.

ஆனால்,  ஒரு சில குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வாங்காமலே வாங்கியதாக குறுஞ்செய்தி செல்கிறது என அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன.

இனி அவ்வாறு புகார்கள் வந்து நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment