உணவுப்பொருட்கள் விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிப்பு – மக்களவையில் கனிமொழி எம்பி பேச்சு

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்களவையில் கனிமொழி எம்பி பேச்சு. நாட்டில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வரும் நிலையில், விலைவாசி உயர்வு குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் பேசிய கனிமொழி எம்பி, உணவுப்பொருட்களின் கடுமையான விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. பாஜக ஆட்சியில் … Read more

#BREAKING: ஆவின் பொருட்களின் விலை உயர்வு!

ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு. ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.50 , ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என பால் முகவர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. 200 கிராம் தயிர் … Read more

#BREAKING: நூல் விலை உயர்வு – பிரதமருக்கு, முதல்வர் கடிதம்!

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம். பருத்தி, நூல் விலையுயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் ஸ்டிரைக்கை தொடங்கியுள்ள நிலையில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். பருத்தி, நூல் விலை உயர்வால் … Read more

#BREAKING: அட்சய திரிதியை முடிந்ததும்… தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,864க்கு விற்பனை. அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு குறைந்து வந்த தங்கம் விலை, மீண்டும் உயரத்தொடங்கியது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 உயர்ந்து, ரூ.38,912க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,864க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று சென்னையில் வெள்ளியின் விலை ரூ.1 … Read more

தமிழக மக்களைத் தாங்கொணா துயரத்தில் தள்ளி இருக்கின்றன – கமல்ஹாசன்

விலை உயர்வை கண்டித்து இன்று மநீம மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது என அக்கட்சி தலைவர் ட்வீட். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று மநீம மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மக்களைத் தாங்கொணா துயரத்தில் தள்ளி இருக்கின்றன. … Read more

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு – தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம். இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்றும் 5 மாநில தேர்தலுக்கு பின் இந்த விலை உயர்வு இருக்கலாம் என்றும் பரவலாக பேசப்பட்டு வந்தது. அதன்படி, 137 நாட்களுக்குப் பின்னர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. … Read more

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 300 டாலரை எட்டும் – ரஷ்யா எச்சரிக்கை!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி முதல் ராணுவ தாக்குதலில் கடுமையாக ஈடுபட்டு, முக்கிய நகரங்களை கைப்பற்றி வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. போர் நாடாகும் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்ததாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதன்படி, உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக … Read more

தமிழக அரசின் இந்த முடிவு மக்கள் நலனுக்கு எதிரானது! – பாமக நிறுவனர் ராமதாஸ்

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் குடிப்பகங்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்தத் தீர்ப்பை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு மக்கள் நலனுக்கு எதிரானது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி குடிப்பக உரிமம் நிறைவடைந்துள்ள மற்றும் உரிமம் இல்லாத 3719 குடிப்பகங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும். மற்றவை 6 மாதங்களில் … Read more

விடியல் ஆட்சி தொடங்கி விட்டது! – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட்

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை கடந்த 4-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்தது. அதன்படி, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535 ஆக உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27ல் லிருந்து ரூ.30 ஆகவும், குல்பி ரூ.25ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் இருந்து ரூ.100 … Read more

ஒரு பக்கம் கொடுத்துவிட்டு மறுபக்கம் அவற்றை பிடுங்கி மக்களை ஏமாற்றும் திமுக அரசு – ஓபிஎஸ் கண்டனம்

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது என்று ஆவின் நிறுவனம் அறிவித்திருந்தது.  அதன்படி, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535 ஆக உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27ல் லிருந்து ரூ.30 ஆகவும், குல்பி ரூ.25ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் … Read more