அமுல் இந்தியாவின் முன்மாதிரி.! ஆவின் கைக்கூலி… அண்ணாமலை கடும் தாக்கு.!

annamalai

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பாலில், கொழுப்புசத்து அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து, ஆவின் நிறுவனத்தின் பால் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்து இருந்தார். அவரது பதிலில், ஆவின் பால் பாக்கெட்டில் இருந்து இந்த ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை. ஆவின் பாலை குறை கூறிவிட்டு, வடமாநில பால் நிறுவனத்தை  தமிழகத்திற்கு கொண்டு வர … Read more

மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல.! அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி.!

BJP State President Annamalai - Tamilnadu Minister Mano Thangaraj

தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தின் பாலில் கொழுப்பு அளவு குறைக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டினார். மேலும், இதுகுறித்த ஆய்வறிக்கை என்றும் ஒரு பதிவை ததனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து ஆவின் பால் தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இது குறித்து பதில்  அளித்து இருந்தார். ஆவின் பால் பாக்கெட்டில் … Read more

ஆவின் நிர்வாகம் எடுத்த திடீர் முடிவு.. கண்டனங்களை பதிவு செய்யும் அரசியல் தலைவர்கள்!

ttv dinakaran

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம், தமிழகம் முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதில் குறிப்பாக 4.5% கொழுப்புச்சத்துடன் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நாளை மறுநாள் முதல் நிறுத்துவதாகவும், அதற்கு பதில் 3.5% … Read more

ஆவின் பால் பச்சை பாக்கெட் தட்டுப்பாடா..? – அமைச்சர் நாசர் விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் மக்களின் தேவைக்கேற்ப பால் விநியோகிக்கப்படுகிறது என அமைச்சர் நாசர் பேட்டி.  பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய பால் விலை அதிகரிக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் மக்களின் தேவைக்கேற்ப பால் விநியோகிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 65 லட்சம் பால் பாக்கெட்டுகள் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி செய்கிறோம். திருவிழாக்களின் போது அதிகமான பால் பாக்கெட்டுகள் விற்பனையாகும். அந்த சமயங்களில் அதிகமான பால் பாக்கெட்டுகள் உற்பத்தி … Read more

ஆவின்பால் பால் கொள்முதல் விலை உயர்வு – இன்று பேச்சுவார்த்தை

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று பேச்சுவார்த்தை.  ஆவின் பால் கொள்முதல் விலை, விற்பனை விலை உயர்வு குறித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.  ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51 என கொள்முதல் விலையை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அக்.28-ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்காமல் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, … Read more

தீபாவளி பண்டிகையின் போது ரூபாய் 200 முதல் 250 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயம் – அமைச்சர் நாசர்

ஆவின் மூலம் தீபாவளி பண்டிகையின் போது ரூபாய் 200 முதல் 250 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயம்.  பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆவின் மூலம் தீபாவளி பண்டிகையின் போது ரூபாய் 200 முதல் 250 கோடி மதிப்பிலான இனிப்புகள் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்தாண்டு ரூ.85 கோடி … Read more

#BREAKING: விரைவில் ஆவின் மூலம் குடிநீர் விற்பனை – அமைச்சர் நாசர் அறிவிப்பு

ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஆவினுக்கு சொந்தமான 28 auro plant உள்ளது. இந்த plant மூலம் தண்ணீர் பாட்டில் தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார். அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை தயாரித்து விற்க ஏற்பாடு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா … Read more

#BREAKING: ஆவின் பொருட்களின் விலை உயர்வு!

ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு. ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.50 , ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என பால் முகவர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. 200 கிராம் தயிர் … Read more

#BREAKING: இன்று முதல் உயர்கிறது ஆவின் பொருட்களின் விலை!

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535 ஆக உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27ல் லிருந்து ரூ.30 ஆகவும், குல்பி ரூ.25ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் பாதாம் … Read more

#Breaking:அரசு வேலை மோசடி – ராஜேந்திர பாலாஜி மீது குவியும் புகார்கள்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,தற்போது அவர் மீது மேலும் 3 பணமோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதியப்பட்டு தமிழக காவல்துறை 8 தனிப்படை அமைத்து … Read more