வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி – கனிமொழி எம்பி

வாழ்த்துகளால் இன்னும் அதிகம் செயலாற்றிட ஊக்கமும் உற்சாகமும் பெறுகிறேன் என கனிமொழி எம்பி ட்வீட். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜாா்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக 15 ஆவது பொதுக்குழு தேர்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது, பொதுக்குழுவில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி தேர்வானார். இதன்பின் பொருளாளர் டிஆர் பாலு, பொதுச்செயலாளர் … Read more

உணவுப்பொருட்கள் விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிப்பு – மக்களவையில் கனிமொழி எம்பி பேச்சு

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்களவையில் கனிமொழி எம்பி பேச்சு. நாட்டில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வரும் நிலையில், விலைவாசி உயர்வு குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் பேசிய கனிமொழி எம்பி, உணவுப்பொருட்களின் கடுமையான விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. பாஜக ஆட்சியில் … Read more

பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது – கனிமொழி

மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும் என கனிமொழி ட்வீட். கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய பெற்றோர் முயற்சி செய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மாணவிக்கு … Read more

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை.., முதல்வருக்கு நன்றி – கனிமொழி எம்.பி. ட்வீட்!

வளர்ச்சியோடு சூழலியல் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று கனிமொழி எம்.பி. ட்வீட். இதுகுறித்து திமுக மகளிரணி தலைவரும், எம்பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் சுற்றுச் சூழலை மேம்படுத்த ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ள இயக்கம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது. வளர்ச்சியோடு சூழலியல் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், … Read more

தனியார் மருத்துவமனைகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி எம்.பி

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி வலியுறுத்தல். திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு நிர்ணயித்த கொரோனா சிகிச்சை கட்டணத்தை விட அதிகமாக சில தனியார் மருத்துவமனைகள் வசூலித்து வருவதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டணத்தை நிர்ணயித்த அரசு அதனை முறையாக செயல்படுத்தவும் வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களை … Read more

#BREAKING: திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா உறுதி.!

திமுக எம்பியும், அக்கட்சி மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த திமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கனிமொழி, சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இன்று மதியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கனிமொழி செல்ல … Read more