#Shocking:”நான் மர்மமான முறையில் இறந்தால்” – எலான் மஸ்க் பகீர் ட்வீட்!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான மஸ்க் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறார்.அந்த வகையில்,ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருவதை விமர்சித்த எலான், கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று கைப்பற்றினார். நான் மர்மமான முறையில் இறந்தால்: இந்நிலையில்,மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”நான் மர்மமான சூழ்நிலையில் இறந்தால்,அதற்கான … Read more

#BREAKING: மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா! – அதிபர் புடின் அறிவிப்பு

ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என அதிபர் புடின் பெருமிதம். உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. ரஷ்ய படைகளுக்கு பாராட்டுக்கள் எனவும் தெரிவித்துள்ளார். … Read more

எத்தனை ரஷ்ய படைகள் வந்தாலும் இதுதான் பதில் – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

உக்ரைன் மீது தொடர்ந்து 55-வது நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில்,உக்ரைனின் கிழக்கு பகுதியைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் முயல்வதாகவும்,எத்தனை ரஷ்ய படைவீரர்கள்  வந்தாலும்,நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,வீடியோ வெளியிட்டுள்ள ஜெலென்ஸ்கி:”ரஷ்யப் படைகள் டான்பாஸிற்கான போரைத் தொடங்கிவிட்டன,அதற்காக அவர்கள் நீண்ட காலமாகத் தயாராகி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் கணிசமான அளவு ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டு தாக்குதலை நடத்த கவனம் செலுத்துகின்றன. ஆனால்,அவர்கள் எத்தனை ரஷ்ய படைவீரர்களை அந்தப் … Read more

உக்ரைனுக்கு செல்லத் தயார் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு செல்ல அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தயாராக இருப்பதாக தகவல்.  உக்ரைன் மீது ரஷ்ய கடுமையான தாக்குதலை நடத்தி வந்தபோது உக்ரனுக்கு ராணுவ மற்றும் நிதி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அமெரிக்க வழங்கியது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா. இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு செல்லத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

#Breaking:உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம்- AICTE உத்தரவு

உக்ரைன்-ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு நாடு திரும்பிய மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்து கொள்ள வேண்டும் என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களில் நடப்பாண்டே மாணவர்களை சேர்க்க AICTE உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக,அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வி-சிக்களுக்கும், ஏஐசிடிஇ-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்,உக்ரைனில் இருந்து திரும்பிய சுமார் 20,000 மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை … Read more

உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் படையை குறைக்கும் ரஷ்யா..!

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே படையை குறைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையே இதுவரை பெலாரசில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு ஏதும் எட்டப்படாததால், துருக்கியில் உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி … Read more

போரை மனிதகுலம் அழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – போப் பிரான்சிஸ்

வாடிகனில், ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலக மோதலுக்கு வழிவகுத்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையே இதுவரை பெலாரசில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு ஏதும் எட்டப்படாததால், … Read more

உக்ரைன் – ரஷ்யா இடையே இன்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை!

துருக்கியில் உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. கடந்த பிப்.24-ஆம் தேதி உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் உத்தரவிட்டதை தொடர்ந்து, தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தொடர் தாக்குதலில் இருநாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தொடுத்துள்ள போரால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். உக்ரைன் – … Read more

இன்று மாலை முதல் வரும் 28-ம் தேதி காலை வரை ஊரடங்கு – கீவ் மேயர் அறிவிப்பு

போர் பதற்றம் நிலாவை வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு. உக்ரைன் தலைநகர் கீவில் இன்று மாலை முதல் வரும் 28-ம் தேதி காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று கீவ் மேயர் அறிவித்துள்ளார். போர் பட்டம் நிலவி வரும் நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது கடந்த 24 -ஆம் தேதி முதல் தொடர்ந்து 31-வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. … Read more

மரியுபோல் தியேட்டர் தாக்குதலில் 300 பேர் உயிரிழப்பு..?

கடந்த வாரம் மரியுபோல் நகரில் உள்ள தியேட்டரில் நடந்த தாக்குதலில் 300 பேர் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அச்சப்படுவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் தொடர்ந்து 1 மாதமாக நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் மரியுபோல் நகரில் உள்ள 1 தியேட்டர் மீது ரஷ்ய போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதில் 300 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அச்சப்படுவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் … Read more