ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு..!

military plane

உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கோரோடில் ரஷ்ய போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் எஸ்-300 ஏவுகணை மூலம் உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. விமானத்தில் 65 உக்ரைன் போர்க் கைதிகள், ஆறு பணியாளர்கள் மற்றும் மூன்று இராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த போர் கைதிகள் உக்ரைனில் நடந்து வரும் போரின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவத்தால் பிடிக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான … Read more

அமைதிக்கான நடவடிக்கைகளில் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவளிக்கும்- மோடி

அமைதிக்கான நடவடிக்கைகளில் உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு தரும் என மோடி, ஜெலன்ஸ்கியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த 10 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வரும் வேளையில், உலக நாடுகளில் பெரும்பங்கு முக்கியமானதாகக் கருதப்படும் இந்தியாவின் ஆதரவு யாருக்கு என்று பலவாறு பேசப்பட்டு வந்தது. மேலும் ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவரும் இந்தியா நடுநிலையில் தனது ஆதரவை அளித்து வந்தது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் மோடி, போரை நிறுத்தும் அமைதி நடவடிக்கைகளில் … Read more

உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா விரும்புகிறது- புடின்

உக்ரைன் போர் முடிவுக்கு வர ரஷ்யா விரும்புவதாக அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். உக்ரைனில் மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும், சண்டை முடிந்தவரை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் புடின் கூறியதாக தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் (SMH) தெரிவித்துள்ளது. “எங்கள் இலக்கு இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதுதான். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம், தொடர்ந்து பாடுபடுவோம்,எனவே இவை அனைத்தும் முடிவடைவதை உறுதி செய்ய முயல்வோம், விரைவில் சிறப்பாக செயல்படுவோம்” என்று புடின் … Read more

போரில் நீங்கள் தனியாக இல்லை, அமெரிக்கா துணை இருக்கிறது – ஜோ பைடன்

நீங்கள் ஒருபோதும் தனித்து விடப்பட மாட்டீர்கள் என்று ஜெலென்ஸ்கியிடம் ஜோ பைடன் கூறியுள்ளார். ரஷ்யா- உக்ரைன் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், முதல் வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இன்று  வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி தனது நாடு ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடையாது என்று கூறியிருந்தார், இதனையடுத்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெலென்ஸ்கியிடம், நீங்கள் ஒருபோதும் … Read more

2023 ஆம் ஆண்டின் சார்லமேன் பரிசுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தேர்வு.!

2023 ஆம் ஆண்டின் சார்லமேன் பரிசுக்கு உக்ரைன் அதிபர் வெலாடிமிர் ஜெலன்ஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச சார்லமேன் பரிசுக்கு உக்ரைன் அதிபர் வெலாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் உக்ரைன் மக்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜெர்மன் பரிசுக் குழு தெரிவித்தது. ஜெர்மனியின் ஆச்சென் நகரம், ஐரோப்பிய ஒற்றுமைக்கான பங்களிப்புகளுக்காக வழங்கும் இந்த சார்லமேன் பரிசு நேற்று ஜெலன்ஸ்கிக்கு வழங்கப்பட்டது என்று கூறியது. ஐரோப்பிய ஒற்றுமைக்காக ஆற்றிய பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் உக்ரைனின் … Read more

ரஷ்யா அடுத்தடுத்த தாக்குதல்.! உக்ரைனில் 10 மில்லியன் மக்கள் மின்சாரமின்றி தவிப்பு.!

ரஷ்யா மேலும் நடத்திய தாக்குதல்களால் உக்ரைனில் மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு. உக்ரேனிய எரிவாயு மற்றும் மின்சார உள்கட்டமைப்பு மீது ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் உக்ரைனின் மின்சார கட்டடம் தாக்கப்பட்டு, மில்லியன் கணக்கான உக்ரரைன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்தார். போருக்கு முன் உக்ரைன் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தற்போது கடுமையாக … Read more

நாங்கள் வரிசையில் முதல் நிற்கிறோம்.., அடுத்து நீங்கள் தான் .., உக்ரைன் ஜனாதிபதி பேச்சு..!

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரில் ஏராளமான உக்ரைன் நாட்டு மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மற்ற பிற நாடுகள் தங்களுக்கு ஆதரவாக கை கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார். தற்போதும் இது குறித்து பேசியுள்ள வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா தெற்கு உக்ரேன் முழுவதையுமே கைப்பற்ற விரும்புவதாகவும், அதுமட்டுமல்லாமல் இதனை அடுத்து மற்றொரு நாடுகளை  ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். … Read more

எத்தனை ரஷ்ய படைகள் வந்தாலும் இதுதான் பதில் – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

உக்ரைன் மீது தொடர்ந்து 55-வது நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில்,உக்ரைனின் கிழக்கு பகுதியைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் முயல்வதாகவும்,எத்தனை ரஷ்ய படைவீரர்கள்  வந்தாலும்,நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,வீடியோ வெளியிட்டுள்ள ஜெலென்ஸ்கி:”ரஷ்யப் படைகள் டான்பாஸிற்கான போரைத் தொடங்கிவிட்டன,அதற்காக அவர்கள் நீண்ட காலமாகத் தயாராகி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் கணிசமான அளவு ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டு தாக்குதலை நடத்த கவனம் செலுத்துகின்றன. ஆனால்,அவர்கள் எத்தனை ரஷ்ய படைவீரர்களை அந்தப் … Read more

3ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் – உக்ரைன் அதிபர்..!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி 26 நாள்கள் ஆகிவிட்டது. ரஷ்ய இராணுவம் ஹைப்பர்சோனிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்கல் நடத்தி வருகிறது. உக்ரைனில் மரியுபோல், அவ்திவ்கா, கிராமடோர்ஸ்க், போக்ரோவ்ஸ்க், நோவோசெலிடிவ்கா ஆகிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் இருந்து இதுவரை 3.3 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு  சென்றதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. மூன்றாம் உலகப் போர்: இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி புதினுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், … Read more

ரஷ்ய தாக்குதலில் 97 குழந்தைகள் உயிரிழப்பு: அதிபர் செலன்ஸ்கி..!

கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு உறுப்பினர்களிடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி  காணொளி மூலம் பேசினார். அப்போது தங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி, தங்கள்  மீது ரஷ்யா அடுத்தடுத்து மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ரஷ்யாவின் அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று செலன்ஸ்கி கூறினார்.  ரஷ்ய படைகள்  குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும்பள்ளிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதால் தலைநகர் கீவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த போரினால் உக்ரைனில் 97 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலையும் செலன்ஸ்கி வெளியிட்டார்.