ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு..!

military plane

உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கோரோடில் ரஷ்ய போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் எஸ்-300 ஏவுகணை மூலம் உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. விமானத்தில் 65 உக்ரைன் போர்க் கைதிகள், ஆறு பணியாளர்கள் மற்றும் மூன்று இராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த போர் கைதிகள் உக்ரைனில் நடந்து வரும் போரின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவத்தால் பிடிக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான … Read more

உக்ரைன் போர்க் கைதிகள் சென்ற ரஷ்ய இராணுவ விமானம் விபத்து..!

Ilyushin Il-76

உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  தொடங்கிய நிலையில்,  இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வந்த தாக்குதல் சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், ரஷ்யாவின் இலியுஷின் Il-76 இராணுவ போக்குவரத்து விமானம் … Read more

ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் நகரத்தில் உக்ரைன் தாக்குதல் – 13 பேர் பலி!

Ukraine shells Russian

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் டொனட்ஸ்க் நகரம் மீது உக்ரேனியப் ராணுவ படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 10 பேர் காயமடைந்ததாக டொனட்ஸ்க் நகர நிர்வாகத் தலைவர் டெனிஸ் புஷிலின் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சம்பவம் குறித்து உக்ரைனில் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டொனட்ஸ்க் நகரின் மேயரின் கருத்துப்படி, உக்ரேன் ராணுவம் இங்கிருக்கும் கடைகள் அமைந்துள்ள பரபரப்பான பகுதியில் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார். தாக்குதலை … Read more

உக்ரைனின் அருங்காட்சியகம் மற்றும் துறைமுகம். மீது ரஷ்யா தாக்குதல்..8 பேர் காயம்!

Russian strikes - Ukraine Odesa

உக்ரேனின் கருங்கடல் துறைமுகமான ஒடேசா நகரம் மீது ரஷ்யா ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் சுமார், 20 அடுக்கு மாடி கட்டிடங்கள்  மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 124 ஆண்டுகள் பழமையான ஒடேசா நுண்கலை அருங்காட்சியகமும் சேதமடைந்ததுள்ளது. அது மட்டும்மல்லாமல், ஒரு தானிய கிடங்கு மற்றும் தானியங்களுடன் கூடிய லாரிகள் … Read more

அணுகுண்டு சோதனை நடத்திய ரஷ்யா! திடீர் முடிவால் பரபரப்பு…அடுத்தது என்ன?

Russia putin and Nuclear Bomb

உக்ரைன் மற்றும் காசாவில் போர் நடைபெற்றுவரும் நிலையில் ரஷ்யா அணுகுண்டு சோதனை நடத்தியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அணுசக்தி சோதனைக்கு எதிராக ரஷ்யா, உலக அளவில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, அணு ஆயுதங்களை தயாரிப்போம் எனவும், ஆனால் அணு ஆயுத சோதனை செய்ய போவதில்லை என்று ஒப்பந்தம்  செயப்பட்டு இருந்தன. இந்த நிலையில், அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBT) ஒப்புதலை ரத்து செய்யும் மசோதாவிற்கு ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். தற்போது, அந்த ஒப்பந்தத்தின் … Read more

உக்ரைன் உணவகத்தில் திடீர் தாக்குதல்: இரண்டு பேர் உயிரிழந்தனர்!

ukraine

உக்ரைன் தெற்கு மைகோலேவ் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்ததாக மைகோலேவ் கவர்னர் விட்டலி கிம், செய்தியார்களிடம் உறுதி செய்துள்ளார். நேற்று இரவு 8:30 மணிக்கு மைகோலேவ் குடியிருப்பு பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தை ரஷ்ய  ஏவுகணை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் மொத்தமும் இடிந்துள்ளது. இதனையடுத்து, மீட்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்ற நிலையில், இந்த  இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த … Read more

#BREAKING: படையை திரட்ட ரஷ்ய அதிபர் புதின் அதிரடி உத்தரவு!

ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி அழித்திட மேற்கு நாடுகள் சதி செய்வதாகவும் அதிபர் புதின் புகார். உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவில் படைகளை திரட்டுமாறு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ராணுவ பயிற்சி பெற்று வேறு வேளைகளில் ஈடுபட்டுள்ள போரிடும் உடல் தகுதியுள்ளவர்களை திரட்ட அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்று ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றி, படையில் இருந்து விலகி வேறு வேறு பணிகளில் உள்ளவர்களையும் திரட்ட அதிரடியாக ஆணையிட்டுள்ளார். ரஷ்யாவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி, இறுதியில் … Read more

உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர் ஆயுதங்களை அள்ளிக்கொடுத்த அமெரிக்கா

ரஷ்யாவை எதிர்த்துப் போரிடும் உக்ரேனிய இராணுவத்திற்கு உதவும் வகையில் 600 மில்லியன் டாலர் ஆயுத உதவியை  அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது. இந்த தொகுப்பில் ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்ஸ் (ஹிமார்ஸ்), கிளேமோர் சுரங்கங்கள், 105 மிமீ பீரங்கி சுற்றுகள் மற்றும் 155 மிமீ துல்லிய வழிகாட்டும் பீரங்கி சுற்றுகள் ஆகியவை அடங்கும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, அமெரிக்கா உக்ரைனுக்கு 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

எத்தனை ரஷ்ய படைகள் வந்தாலும் இதுதான் பதில் – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

உக்ரைன் மீது தொடர்ந்து 55-வது நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில்,உக்ரைனின் கிழக்கு பகுதியைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் முயல்வதாகவும்,எத்தனை ரஷ்ய படைவீரர்கள்  வந்தாலும்,நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,வீடியோ வெளியிட்டுள்ள ஜெலென்ஸ்கி:”ரஷ்யப் படைகள் டான்பாஸிற்கான போரைத் தொடங்கிவிட்டன,அதற்காக அவர்கள் நீண்ட காலமாகத் தயாராகி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் கணிசமான அளவு ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டு தாக்குதலை நடத்த கவனம் செலுத்துகின்றன. ஆனால்,அவர்கள் எத்தனை ரஷ்ய படைவீரர்களை அந்தப் … Read more

ரஷ்யா – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10-ல் துருக்கியில் பேச்சுவார்த்தை.!

ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் ஏற்படாததால், இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் சந்திப்பு இன்னும் 2 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்றும் ரஷ்ய தூதுக்குழு தற்போது பெலாரஸில் காத்திருப்பதாக ரஷ்ய ஊடகம் தகவல் கூறியுள்ளது. இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10-ல் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் … Read more