அமைதிக்கான நடவடிக்கைகளில் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவளிக்கும்- மோடி

அமைதிக்கான நடவடிக்கைகளில் உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு தரும் என மோடி, ஜெலன்ஸ்கியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த 10 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வரும் வேளையில், உலக நாடுகளில் பெரும்பங்கு முக்கியமானதாகக் கருதப்படும் இந்தியாவின் ஆதரவு யாருக்கு என்று பலவாறு பேசப்பட்டு வந்தது. மேலும் ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவரும் இந்தியா நடுநிலையில் தனது ஆதரவை அளித்து வந்தது.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் மோடி, போரை நிறுத்தும் அமைதி நடவடிக்கைகளில் உக்ரைனுக்கு இந்தியா தனது ஆதரவை வழங்கும் என்று கூறியுள்ளார். மேலும் போரின் காரணமாக உக்ரைனில் இருந்து கல்வியை தொடர முடியாமல் பாதியில் திரும்பிய மாணவர்களுக்கு வேறு ஏற்பாடு செய்து தருமாறு மோடி, ஜெலன்ஸ்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக ஜெலன்ஸ்கி, மோடியுடன் நடந்த உரையாடலுக்கு பிறகு தனது அமைதி பார்முலாவிற்கு இந்தியாவின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment