உக்ரைன் போருக்கு இடையேயும் தனது மருத்துவ கல்வியை தொடரும் இந்திய மாணவர்கள்.! அமைச்சர் தகவல்.!

மருத்துவ கல்வியை தொடரும்  சுமார் 1,100 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உள்ளனர்.   ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போரானது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியத்தூதரகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேறுமாறு கூறியது. ஆனாலும் தற்பொழுது உக்ரைனில் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். இதனையடுத்து அக்டோபர் மாதம் நடந்த லோக்சபா மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனகாஷி லேகி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேறுமாறு கிய்வில் … Read more

உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா .. ! மின்சாதன உபகரணங்களை வாங்க 53 மில்லியன் டாலர் ஒதுக்கீடு..!

ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவும் வகையில் அமெரிக்கா 53 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் ரஷ்யா உக்ரைனின் மின்சார கட்டமைப்பை குறிவைத்து தாக்கியது.ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைனின் மின்சாரக்கட்டமைப்பு பாதிக்கப்பட்டதைத்  தொடர்ந்து உக்ரைனின் பல பகுதிகளில் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். இந்த தாக்குதலால் சேதமடைந்த மின் கட்டமைப்பை சரி செய்வதற்காக, அமெரிக்கா மின்சார உபகரணங்கள் வாங்குவதற்கு 53 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 432 கோடி)  … Read more

உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளில் ராணுவ சட்டம்.! ரஷ்ய அதிபர் புதின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், கெர்சன், சப்போரிசியா ஆகிய பகுதிகளில் ராணுவ சட்டத்தை ரஷ்ய அதிபர் புதின் அமல்படுத்தியுள்ளார்.  ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 8 மாதங்களாக தொடர்கிறது. இதில் ஆரம்பம் முதலே ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. இடையில் சிறுது மாதம் போர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மை காலமாக போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், … Read more

உக்ரைனுக்கு 600 மில்லியன் டாலர் ஆயுதங்களை அள்ளிக்கொடுத்த அமெரிக்கா

ரஷ்யாவை எதிர்த்துப் போரிடும் உக்ரேனிய இராணுவத்திற்கு உதவும் வகையில் 600 மில்லியன் டாலர் ஆயுத உதவியை  அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது. இந்த தொகுப்பில் ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்ஸ் (ஹிமார்ஸ்), கிளேமோர் சுரங்கங்கள், 105 மிமீ பீரங்கி சுற்றுகள் மற்றும் 155 மிமீ துல்லிய வழிகாட்டும் பீரங்கி சுற்றுகள் ஆகியவை அடங்கும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து, அமெரிக்கா உக்ரைனுக்கு 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

#Shocking:”நான் மர்மமான முறையில் இறந்தால்” – எலான் மஸ்க் பகீர் ட்வீட்!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான மஸ்க் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறார்.அந்த வகையில்,ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருவதை விமர்சித்த எலான், கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று கைப்பற்றினார். நான் மர்மமான முறையில் இறந்தால்: இந்நிலையில்,மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”நான் மர்மமான சூழ்நிலையில் இறந்தால்,அதற்கான … Read more

“ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா ஏன் நடுநிலை?” – பிரதமர் மோடி விளக்கம்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரஷ்யா மீது மிகப்பெரிய நிறுவனங்கள் பொருளாதார தடையை விதிக்க தொடங்கியுள்ளன. ஆனால்,உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக ஐநா பொதுச் சபையின் தீர்மானத்தை இந்தியா,சீனா உள்ளிட்ட சில நாடுகள் புறக்கணித்தன.குறிப்பாக, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக பொதுச் சபைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் இருந்தும் இந்தியா விலகியிருந்தது. இந்நிலையில்,ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் … Read more

#BREAKING : ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் – உக்ரைன் கோரிக்கை

உடனடியாக போர் நிறுத்த வேண்டும், அதேபோல ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும் என  அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் தரப்பில் வலியுறுத்தியுள்ளது.  நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. எனினும், பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க … Read more

“உக்ரைனில் தங்கியுள்ள 5,000 தமிழர்கள் உட்பட 16,000 இந்தியர்கள்” – ஓபிஎஸ் முக்கிய கோரிக்கை!

உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள 5,000 தமிழர்கள் உட்பட 16,000 இந்தியர்களை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஓபிஎஸ் கோரிக்கை. உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட கேரள மாணவர்களும் இன்று சென்னை வந்தனர்.சென்னை விமான நிலையம் வந்த 5 மாணவர்களையும் அமைச்சர் மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், … Read more

#Breaking:பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகள் தயார் என ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தங்களது பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு. உக்ரைனின் பெரிய நகரமான கார்கிவ் பகுதியில் உக்ரைன் – ரஷ்யா இடையே தற்போது கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. ஆனால்,கார்கிவ் பகுதியை கைப்பற்றி விட்டதாகவும்,471 உக்ரைன் வீரர்களை கைது செய்துள்ளதாகவும் சற்று முன்னதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. இந்நிலையில்,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தங்களது பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரைன் … Read more

“நிச்சயமாக நான் சண்டையிடுவேன்” – உக்ரைன் ராணுவத்தில் இணைந்த டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி!

உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி,ரஷ்ய படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக தனது நாட்டின் ராணுவப் படையில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக  தரை,வான் வழியாக ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைனை கொடூரமாக தாக்கி வருகிறது. இதனால், உக்ரைன் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் புகுந்து வருகின்றனர். எனினும்,18 முதல் 60 வயது வரையுள்ள உக்ரைன் ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு … Read more