உணவுப்பொருட்கள் விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிப்பு – மக்களவையில் கனிமொழி எம்பி பேச்சு

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்களவையில் கனிமொழி எம்பி பேச்சு.

நாட்டில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வரும் நிலையில், விலைவாசி உயர்வு குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் பேசிய கனிமொழி எம்பி, உணவுப்பொருட்களின் கடுமையான விலை உயர்வால் குடும்ப பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது என்றும் குற்றசாட்டினார். சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சில தொழிலதிபர் வளவவதற்கு அரசு உதவி செய்து வருகிறது. அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பணமதிப்பிழப்பு மூலம் கறுப்பு பணம் ஒழிந்துவிடும் என மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் கறுப்பு பணம் புழங்கி வருவது எப்படி என கேள்வி எழுப்பினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 50,000 சிறு, குறு தொழில் நிறுவங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

author avatar
Castro Murugan

Leave a Comment