#BREAKING: ஆவின் பொருட்களின் விலை உயர்வு!

ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு.

ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.50 , ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என பால் முகவர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

200 கிராம் தயிர் விலை ரூ.25 லிருந்து ரூ.28 ஆக அதிகரித்துள்ளது. தயிர் 100 கிராம் ரூ.10 லிருந்து 12 ரூபாய் ஆகவும், 1 கிலோ ரூ.100ல் இருந்து ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 500 கிராம் ஆவின் தயிர் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.535ல் இருந்து ரூ.580 ஆகவும், 500ml ஆவின் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அந்நிர்வாகம் அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment