ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த 5 தூத்துக்குடி மீனவர்களில் ஒரு மீனவரின் உடல் இறுதிசடங்குக்காக நாளை தூத்துக்குடி வருகிறது….

தூத்துக்குடி:ஒகி புயலில் சிக்கி உயிழந்த தூத்துக்குடி மீனவர் காலனியை சேர்ந்த மீனவர் ஜூடு(வயது 40) என்பவரது உடல் மட்டும் DNA பரிசோதனை மூலம் மட்டும் அடையாளம் காணப்பட்டு,பின்பு பிரேத பரிசோதனை செய்யபட்டுள்ளார்.இறந்த அந்த மீனவரது உடலானது நாளை காலை தூத்துக்குடி வந்தடையும் பின்பு அவருக்கான இறுதிசடங்கு நடைபெறும் அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீனவர்களின் குடும்பத்தினரால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை: இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு … Read more

கேரள அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு…!

கேரள அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு… ஒக்கி புயலின் தாக்கத்தால் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 20 இலட்சமும் காயத்துடன் மீட்கப்பட்ட மீனவர்களுக்கு ரூபாய் 5 இலட்சமும் நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என கேரளா இடது முன்னணி அரசு அறிவித்துள்ளது.

ஓகி புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு தோழனாக மாறிய தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன்…!

தென்காசியில் ஓகி புயல் நேரத்தில் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வீடில்லாது சாலையில் தங்கியிருந்தவர்களை கண்டறிந்து பள்ளி வளாக அறையில் தங்க வைத்து தானே உணவுகளை பறிமாறியும், அவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடும் செய்து கொடுத்தவர் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன்.   இவரின் இந்த சமூகம் சார்ந்த சேவையை மனதார பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறது நமது தினச்சுவடு.மேலும் அவரின் சேவையை பாராட்டுகளுடன் வாழ்த்துகிறது .

நாளை தூத்துக்குடி மீனவ குடும்பங்களை சந்திக்க போகும் கேரள முதல்வர் பினராயி விஜயன்….!

ஒகி புயல் வருவதற்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்கவும் புயலில் சீக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்கள் உடலை பெறுவது தொடர்பாக தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) தூத்துக்குடி மாவட்ட குழு செய்து வருகிறது.   முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை: இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு வர கேரளா முதல்வர் பினரயி விஜயன் அவர்களோடு CPIM மாநிலசெயலாளர் G.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் பேசினார் அனைத்து உதவியும் கேரளா அரசு … Read more

நெல்லை எனக்கு எல்லை…குமரி எனக்கு தொல்லை…. காணவில்லை எம்.எல்.ஏக்கள்…!

  ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய 6 MLAகளையும் புயலுக்கு பிறகு காணவில்லை????? 1.கன்னியாகுமரி சடமன்ற உறுப்பினர்-எஸ்.ஆஸ்டின் (திமுக) 2.நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் -என்.சுரேஷ் ராஜன் (திமுக) 3.குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்-ஜே.ஜி .பிரின்ஸ் (காங்) 4.பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்-டி.மனோ தங்கராஜன் (திமுக) 5.விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.விஜயதரணி(காங்) 6.கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர்-எஸ்.ராஜேஷ் குமார்(காங்) அவர்கள் அனைவரையும் யாராவது பார்த்தல் கன்னியாகுமரி மக்கள் ஓக்கி புயல் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் மழையின் பாதிப்பு பற்றி தகவல் உங்களுக்காக…!

காயல்பட்டினத்தில் வீசிய புயல் காற்றினால் அரசு மருத்துவமனையில் பல வருடங்களாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. தூத்துக்குடியில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு பாளை ரோட்டில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் முன்பு உள்ள 60 ஆண்டு கால அரச மரம் இன்று அதிகாலை 5மணியளவில் வேரோடு சாய்ந்தது. அவசர உதவிக்காக: தூத்துக்குடி மாவட்ட அவசர கால செயலாக்க மையம் 24 மணி நேரம் செயல்படும். கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0461-2340101 என்ற எண்ணிலும் … Read more

ஓகி புயல்: குமரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஜெனரேட்டர் தேவை…உதவ விரும்புவோர் தொடர்பு கொள்க…!

ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட  மக்களுடன் கைகோர்க்கிறது தினச்சுவடு தற்போது கிடைத்த தகவலின் படி சுசிந்திரம் பகுதியில் உள்ள குழந்தகரையில் இருக்கும் பல பள்ளிகளில் வெள்ளம் மற்றும் புயல் மழையால் பாதிக்கபட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுளனர்.   பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிக்க தண்ணீர்,உணவு அடிப்படை தேவையாக உள்ளது. மேலும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள பகுதிகளில் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் ஜெனரட்டார் மிகத்தேவையான … Read more

போதிய மீட்புகுழுக்களை உள்துறையிடம் கேட்ட பொன்னார்

ஓகி புயல் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தென் மாவட்டங்களில் போதிய அளவில் மீட்புகுழுக்களை அனுப்பிவைக்குமாறு மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜுவிடம் கூறினார். மேலும் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பற்றியும் விளக்கினார். இந்நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் மழையால் நாகர்கோயிலில் நம்பியார் பாலம் இடிந்து விழுந்துள்ளது.