ஓகி புயலில் சிக்கி இறந்து போன மற்றொரு மீனவரின் உடல் ஒரு மாத காலத்திற்கு பின்பு கண்டுபிடிப்பு…

ஒக்கி புயலில் கேரள கடலில் சிக்கிய 6 தூத்துக்குடி மீனவர்களில் மீனவர் ஜெகன் மட்டும் 2 நாட்கள் ஆழ்கடலில் மரண போராட்டம நடத்திய நிலையில் மீட்கப்பட்டு கேரள அரசின் சிறப்பான சிகிச்சையால் மீட்கப்பட்டார். தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஜுடு உடல் விழிஞ்சம் கடலில் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு கேரள அரசின் துணையோடு மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவின் உதவியால் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு டிச 9. ல் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று இரவு … Read more

ஒகி புயலால் காணாமல்போய் கடலில் மீட்கப்பட்ட 2 மீனவர்களின் அடையாளம் காணப்பட்டது!

ஒகி புயலால் காணாமல்போய் கடலில் மீட்கப்பட்ட 2 மீனவர்களின் உடல்கள் திருவனந்தபுரம் மருத்துவமனையில் நடைபெற்ற டிஎன்ஏ சோதனையில் அடையாளம் காணப்பட்டது தூத்தூரை சேர்ந்த மீனவர் இருதயதாஸ், சின்னதுறையை சேர்ந்த மீனவர் கிளிட்டல் என தெரியவந்தது.. source: dinasuvadu.com

கன்னியாகுமரியில் காணாமல் போன மீனவர்களை சக மீனவர்கள் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டம் வல்லவிளை பகுதியைச் சேர்ந்த 47 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது ஓகி புயலில் சிக்கினர். அதைத்தொடர்ந்து கடலில் சிக்கித்தவித்துவந்த அவர்களைத் தேடி வல்லவிளை மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது, கொச்சி கடல் பகுதியில் தத்தளித்த 47 பேரையும் மீட்ட சக மீனவர்கள் அவர்களை கொச்சி துறைமுகத்திற்கு அழைத்துவந்தனர். இதே போல, நேற்று முன் தினம் இதே மீனவர்கள் 10 மீனவர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது. மீனவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படையும், இந்திய கப்பற்படையும் முனைப்பு … Read more

ஒகி புயலால் உயிரிழந்த அனைவருக்கும் பாகுபாடின்றி ரூ 20 லட்சம் இழப்பீடு !

ஒகி புயலால் உயிரிழந்த அனைவருக்கும் பாகுபாடின்றி ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கு . தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.. source: dinasuvadu.com

இந்திய கடற்படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுவ்ரோஜோதி ராய் அவர்களை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்…!

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் பற்றியும், எதிர்காலத்தில் புயல் பாதிப்புக்களை உயிர்ச்சேதமின்றி எதிர்கொள்வது பற்றியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ,நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டி.கே.ரெங்கராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் இந்திய கடற்படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுவ்ரோஜோதி ராய் அவர்களை நேரில் சந்தித்து விவாதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வேண்டும் ; மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள்,விவசாயிகள்,மலைவாழ் மக்கள்,மண்பாண்ட தொழிலாளர்கள் ,சிறு குறு தொழிலாளர்கள், வீடு இழந்தோர், புயலினால் உயிரிழந்தோர் ஆகிய அனைத்துக்கும் வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் குறித்து கோரிக்கை வைத்தார். ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க கப்பற்படை மூலம் தேடுதல் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளேன் எனவும் தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

ஓகி புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்களுக்கு விளக்கம் அளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

ஒக்கி புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் மீட்பு பணிகளை துரிதபடுத்தவும் கோரியுள்ளார்.

கன்னியாகுமாரிக்கு வராத கடல் விமானம்….???

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று பிரதமர் சபர்மதி ஆற்றிலிருந்து ஒரு கடல் விமானத்தில் இப்போது பறந்து கொண்டிருக்கிறார். இந்த விமானம் தண்ணீரிலிருந்து டேக் ஆஃப் ஆகிப் பறக்கும். 125 கோடி இந்தியர்களுக்கு இந்த விமானம் பயனளிக்கும் என்கிறார் அவர். வளர்ச்சியின் அடையாளமாக இது காட்டப் படுகிறது. அனைத்து டெலிவிஷன் சானல்களும் குதூகலாமாகக் குதித்துக் கொண்டிருக்கின்றன. சில சானல்களில் இதற்கு காங்கிரஸ் என்ன பதில் சொல்லப்போகிறது; இதுதான் வளர்ச்சி என்று கூவிக் கொண்டிருக்கின்றன. கடல் விமானத்தில் … Read more

ஓகி புயல்: இழப்பீடு ரூ.20 லட்சம் போதாது ரூ.50 லட்சம் கொடுக்கனும் ட்விட்டரில் கோரிக்கை வைத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…!!

ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் போதாது;அந்த நிவாரண தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்  என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசிடம் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

ஓகி புயல்: உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சமும் ,குடும்பத்தில் படித்த ஒருவருக்கு அரசு வேலை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்து ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் எனவும் மேலும் அவர் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்