ஆளுநர்கள் மக்களால் தேர்வான ஆட்சியாளர் அல்ல – உச்சநீதிமன்றம்

Punjab Governor

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வதாக பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி கூறுகையில்,  உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் செயலாற்றி இருக்க வேண்டும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரி மாநில … Read more

#BREAKING: தமிழக ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு- குடியரசுத் தலைவர் உத்தரவு..!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநரை கூடுதல் பொறுப்பு வழங்கபட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய சில மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தம்மையும், சிலரையும் சேர்க்க சதித்திட்டம் – ஈபிஎஸ்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் விளக்கம். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்தனர். இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நிகழ்ந்துள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி … Read more

75-ஆவது சுதந்திர தின விழா – தமிழக ஆளுநர் தேநீர் விருந்து!!

சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றம்? – ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் சந்திப்பு!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார். டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில், ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை ஆளுநர் சந்திக்க உள்ளார். … Read more

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

டெல்லியில் பிரதமர் மோடியை நாளை மாலைசந்திக்க உள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். டெல்லியில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தமிழகத்தின் அரசியல் சூழல், கொரோனா நிலவரம் உள்ளிட்டவை குறித்து பிரதமருடன் ஆளுநர் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு – ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்.!

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்ததை அடுத்து, சட்ட மசோதாவும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு … Read more

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையை பிரதமர் அறிவிக்க வாய்ப்பு – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வரிலால் புரோகித் நிராகரிக்கவில்லை – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று நேற்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது … Read more

தமிழக அரசின் பரிந்துரை நிராகரிப்பு., குடியரசு தலைவருக்கே அதிகாரம் – ஆளுநர் தரப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்வதில் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உண்டு என்று ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உட்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான ஆளுநரின் முடிவு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யபட்டது. பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரும் மனுமீது விசாரணை வரும் 9-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எழுவர் விடுதலையில் ஆளுநருக்கே அதிகாரம் … Read more

இந்த எண்ணிற்கு அழைத்தால், அரசின் சேவைகளை வீட்டிலிருந்தே பெறலாம் – புதிய திட்டம் அறிமுகம்.!

அரசின் சேவைகளை வீட்டில் இருந்தே பெற 1100 என்ற எண்ணிற்கு அழைத்தால் சேவைகளை விரைவில் பெற இயலும் என ஆளுநர் அறிவித்துள்ளார்.  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆண்டின் முதல் கூட்டத்தொடரான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய பன்வரிலால் புரோகித், தமிழகத்தில் பொருளாதாரம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு, பொருளாதாரம் புத்துயிர் பெறுவதாக தெரிவித்தார். அனைத்து மக்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடரும் எனவும் குறிப்பிட்டார். நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்கு ரூ.5,264 கோடி … Read more