நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்.! மத்திய அமைச்சர் விளக்கம்… எதிர்க்கட்சிகள் கடும் அமளி..! 

Minister Rajnath singh - Lok Sabha Winter session 2023

நாடாளுமன்றத்தில் நேற்று பார்வையாளர் அரங்கில் இருந்து இருவர் மக்களவைக்குள் குதித்தனர். பாதுகாப்பு வளையத்தை தாண்டி அவர்கள் மறைத்து வைத்து இருந்த வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும் அதே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு பெண் ஒரு இளைஞர் என இருவர் அதே போல வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி பன்மடங்கு அதிகரித்தது. நாடாளுமன்றத்தில் அத்துமீறல்.! தொடரும் கைது நடவடிக்கைகள்… ஒருவர் தப்பியோட்டம்.! நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து நேற்றே நாடாளுமன்ற … Read more

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை.. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை – முதல்வர் ஸ்டாலின்

mk stalin

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தெங்கியதால், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், மழைநீர் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணியில் மத்திய, மாநில பேரிடர் … Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு.! தமிழக அரசின் 5060 கோடி ரூபாய் கோரிக்கை.! மத்திய அமைச்சர் தமிழகம் வருகை.!

Tamilnadu CM MK Stalin - Union Minister Rajnath singh

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல்(Michaung cyclone) சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை வெகுவாக பாதித்துள்ளது. இன்னும் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்ற வருகிறது. மழைவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் மக்கள் தங்கள் பகுதிக்கு  மின்சாரம், உணவு உள்ளிட்ட … Read more

ஐஏஎஃப் பயிற்சி விமானம் விபத்து..! இரண்டு விமானிகள் உயிரிழப்பு.!

Pilatus PC 7 Mk-II

தெலுங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் உள்ள துண்டிகல் விமானப்படை அகாடமியான ஏஎஃப்ஏவில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக பிலாடஸ் பிசி 7 எம்கே-II (Pilatus PC 7 Mk II) விமானம் புறப்பட்டது. திடீரென டூப்ரான் என்ற இடத்தில் உள்ள ரவெல்லி கிராமத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தெரிவித்த இந்திய விமானப்படை, விமானம் விபத்தானதில் … Read more

இந்தோனேசியாவிற்கு ராஜ்நாத் சிங் பயணம்..!

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நவம்பர் 16 முதல் 17 ஆம் தேதி வரை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். ஜகார்த்தாவில் நடைபெறும் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில்  (ADMM-Plus) ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் ​​பாதுகாப்பு அமைச்சர் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியா குடியரசு, ரஷ்யா மற்றும் … Read more

இந்தியா தன்னை வலுப்படுத்திக்கொள்வது தான் ஒரே வழி – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

டிப்கனெக்ட் 2.0 எனும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு துறைகளை மேம்படுத்த வேண்டும். எனவே நாம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். அதுமட்டுமில்லாமல் நாம் உருவாக்கக்கூடிய தொழில்நுட்பம் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அது பயனற்றதாகிவிடும். ஒவ்வொரு முறையும் ஏற்படக்கூடிய புதிய ஆபத்துகள் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. இன்னும் … Read more

பாகிஸ்தானில் சீறிப்பாய்ந்து விழுந்த ஏவுகணை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் விளக்கம்..!

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்தது. பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை தற்செயலாக வீசப்பட்டதாகவும், வழக்கமான பராமரிப்பின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நடந்ததாக இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை குறித்து மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் விளக்கமளித்தார். அதில், கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை வழக்கமான பராமரிப்பு மற்றும் ஆய்வின் போது காலை 7 மணியளவில் ஒரு ஏவுகணை தவறுதலாக சீறிப்பாய்ந்தது.  அந்த ஏவுகணை பாகிஸ்தானின் … Read more

#BREAKING: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், லேசான அறிகுறி இருந்ததால், இன்று கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என தெரியவந்தது. இதனால் நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். … Read more

“குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரைத் தாக்கியவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது கண்ணிவெடி மூலம் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அதிகாரி, மனைவி, மகன், ட்ரைவர் மற்றும் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கர்னல் … Read more

தேவை ஏற்பட்டால் எவ்வித சவாலையும் ஏற்க இந்தியா தயார் – மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி!

தேவை ஏற்பட்டால் எவ்வித சவாலையும் ஏற்க இந்தியா தயார் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இன்று சண்டிகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழத்தின் பரிசோதனை கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங் அவர்கள், இரண்டு அறைகளுடன் தொடங்கப்பட்ட இந்த பரிசோதனைக்கூடம் தற்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பத்தை வழங்கும் வல்லமை கொண்ட பரிசோதானை மையமாக மாறியுள்ளது. இந்தியா அமைதியை … Read more