அத்துமீறிய இலங்கை மீனவர்கள்.. 14 பேரை கைது செய்த இந்திய கடற்படை.!

Fisherman

சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 5 நாட்டுப் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் பறிமுதல் செய்தனர். மேலும், கைதான இலங்கை மீனவர்கள் தற்போது … Read more

இந்திய கடற்படை மாலுமி கப்பலில் இருந்து மாயம்! தொடரும் தீவிர தேடுதல் வேட்டை

Indian Navy: இந்திய கடற்படையின் மாலுமி, கப்பலில் இருந்து கடந்த மாதம் 27ஆம் தேதி காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணி தற்போது தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மும்பையை தலைமையிடமாகக் கொண்ட Western Naval Command வெளியிட்டுள்ள தகவலின்படி மாயமான மாலுமி சாஹில் வர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை இந்திய கடற்படையினர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் தேடி வருகின்றனர். Read More – 14 பேர் உயிரை பலி கொண்ட ஆந்திர ரயில் விபத்து..! … Read more

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை..! 7 பேர் தாயகம் திரும்பினர்!

navy officers

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது. கத்தார் நாட்டில் உள்ள  தனியார் நிறுவனம் ஒன்றில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அப்போது,  இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரும் கத்தாரின் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளையும் அந்த நாட்டு அரசு … Read more

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்தியா ..!

INS Sumitra

இந்திய கடற்படை 24 மணி நேரத்தில் வெற்றிகரமாக இரண்டாவது கடற்கொள்ளை எதிர்ப்பு  நடவடிக்கையை தடுத்துள்ளது.  சோமாலியாவை சேர்ந்த 11 கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த மீன்பிடி கப்பலான அல் நயீமி மற்றும் 19 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. நேற்று ஈரானை சார்ந்த 17  பேர் ஏடன் வளைகுடா பகுதியில்  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சோமாலியா கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலை சிறைபிடித்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் … Read more

இந்திய கடற்படை நடத்திய ’சூப்பர்சோனிக் குரூஸ்’ ஏவுகணை பரிசோதனை வெற்றி

இந்திய கடற்படை உள்நாட்டிலேயே தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த சோதனையை இந்திய கடற்படை நடத்தியது. இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளரின் அதிகாரபூர்வ ‘X’ பக்கத்தில் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய கடற்படை மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இணைந்து உள்நாட்டில் தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனையை இன்று வெற்றிகரமாக மேற்கொண்டது. குடியரசு தினம் … Read more

கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் மீட்பு… வெளியான வீடியோ!

MaritimeSecurityOperations

சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட ‘எம்.வி லீலா நார்போக்’ சரக்கு கப்பலை, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலின் கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மீட்டனர்.  மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு (MV LILA NORFOLK ) கப்பல் நேற்று முன்தினம் மாலை கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லைபீரியா நாட்டு கொடியுடன் கப்பல் சென்றதால், இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அரபிக்கடல் … Read more

15 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தல்… விரைந்தது INS போர்க்கப்பல்!

cargo ship Hijacking

சோமாலியா அருகே இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இந்தியர்கள் 15 பேர் உள்ளனர். லைபீரியா நாட்டு கொடியுடன் கப்பல் சென்றதால், இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியா கடற்கொள்ளையர்கள் கப்பலை கடத்திய நிலையில், இந்தியர்களின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் … Read more

இந்திய கடல் எல்லையில் கப்பல் மீது தாக்குதல்… 20 இந்தியர்கள் தவிப்பு.!

MV Chem Plutto ship attacked

இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட அரபிக்கடல் பகுதியில் மேற்கிலிருந்து சுமார் 217 கடல் மைல் தூரத்தில் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்று உள்ளது. இந்த தாக்குதலில் வணிக கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீவிரவாத தாக்குதல்.. இணையதள சேவை நிறுத்தம்..! சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு மங்களூர் துறைமுகத்தை நோக்கி செம் புளுட்டோ (MV Chem Pluto) எனும் வணிகப்பலானது வந்து … Read more

இந்தியா உட்பட 4 நாடுகள் இணைந்து ஜப்பானில் போர் பயிற்சி

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர்.  இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து குவாட் எனும் அமைப்பை உருவாகின. இந்த குவாட் அமைப்பானது ஒன்றிணைந்து கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டன. ஜப்பான் கடற்படையில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர். இதில் இந்திய கடற்படையின் சார்பில் விமானம் தாங்கி கப்பல் உள்பட 11 கப்பல்கள், கடல்சார் ரோந்து விமானங்கள், … Read more

தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு விவகாரம்.! கடற்படை முகாமிற்கு போலீஸ் பாதுகாப்பு.!

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு தமிழக போலீசார் தீவிர பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.  நேற்று நள்ளிரவு, மன்னார் வளைகுடா பகுதியில் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை பகுதி மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, கடலோர காவல்படையினர் சந்தேகத்தில் பேரில் படகை  நிறுத்துவதற்காக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் மீது குண்டடி பட்டது. உடனடியாக கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் அழைத்துவந்தனர். அதன் பிறகு தற்போது மேல்சிகிச்சைகாக மதுரை அரசு … Read more