Breaking news: தமிழிசை ஹெச்.ராஜா ஆகியோர் பின்னடைவு.!

மக்களவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தமிழ் நாட்டில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் பின்னடைவு அடைந்து உள்ளனர் தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜனை எதிர்த்து போட்டியிட்ட கனிமொழியும் சிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து போட்டியிட்ட … Read more

கமல்ஹாசனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் -ஹெச்.ராஜா

கமல்ஹாசனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது பாஜக தேசியசெயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்துக்கள் பற்றி அவதூறாக பேசிய கமல்ஹாசனை, … Read more

கமல்ஹாசன் கட்சி பதவியிலிருந்து விலக வேண்டும்! தமிழிசை வலியுறுத்தல்!

நேற்றைய அரசியல் விவாத பொருளாகவே மாறிவிட்டது கமல்ஹாசன் கூறிய கூற்று. நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசுகையில் ‘ இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான். அது காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்ஸே’ என குறிப்பிட்டு இருந்தார். இதனால் கொதிப்படைந்த பாஜக நிர்வாகிகள் பலத்த எதிர்ப்பை காட்டிவருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா,சுப்பிரமணியன் சாமி என பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் … Read more

இந்த கருத்துக்கு நான் எதுவும் கூற விரும்பவில்லை – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளரை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ‘ இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துவான நாதுராம் கோட்ஸே தான்’ என கூறினார். இதற்க்கு பல பாஜக தலைவர்கள் தமிழிசை, எச் ராஜா என பலரும் தங்கள் கணடனங்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம், கமல்ஹாசன் கூறியதற்கு கருத்து … Read more

ஸ்டாலின் சட்டையை கிழித்ததற்கான காரணம் இதுதான் – எச்.ராஜா விமர்சனம்!

தனது கருத்துக்கள் மூலம் அவ்வப்போது பல சர்ச்சைகளை கிளப்பிவருபவர் பாஜக தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா. அவர் அண்மையில் அளித்த பேட்டியில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தவுடன் முதல்வர் கனவு கண்டார் ஸ்டாலின். அது நடக்காததால், சட்டையை கிழித்து கொண்டார் மேலும், இடைத்தேர்தல் மூலம் முதல்வர் ஆகிவிடலாம் என கனவு காண்கிறார் அதுவும் நடக்காது’ என விமர்சனம் செய்துள்ளார். முன்னதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஒரு … Read more

ஹெச்.ராஜா கோபக்காரர் தான், கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும்- முதலமைச்சர் பழனிசாமி

தூங்கிக் கொண்டிருக்கும் ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அதேபோல்  தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் … Read more

பிரச்சாரத்துக்கு வந்த ஹெச்.ராஜா! ஒரே ஒரு வார்த்தையால் ஆப் செய்த மக்கள்

பொன்னமராவதியில் ஹெச்.ராஜா பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந் நிலையில் அப்போது அங்கிருந்த சிலர் பெரியார் வாழ்க என்று கோஷங்களை எழுப்பினார்கள்.   தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்  நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் சிவகங்கை மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக … Read more

ஹெச்.ராஜா யார் என்பதே எனக்கு தெரியாது : கார்த்திக் சிதம்பரம்

நானும் எனது தந்தை பா.சிதம்பரமும் தவறேதும் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜா யார் என்பதே எனக்கு தெரியாது என்று கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சில கட்சி தலைவர்கள் மற்ற கட்சிகளை தொடர்ந்து விமர்சனம் … Read more

தேர்தல் விதிமுறை மீறல்: சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 14ம் தேதி நடைபெறுகிறது இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சியில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக தலைமையில் பாரதிய ஜனதா, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ,பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி என பல கட்சிகள் கூட்டணியில் சேர்ந்துள்ளது. அதேபோல் திமுகவிலும் பல இடதுசாரி கட்சிகள் கூட்டணியில் சேர்ந்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் பாஜக … Read more

மனித பலத்தை நம்பியே நான் களமிறங்கியுள்ளேன் : ஹெச்.ராஜா

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது, என்றும் இதனை தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம். மனித பலத்தை நம்பியே, தான் களமிறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை ஆலங்குடியில், அதிமுக கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் … Read more