• தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 14ம் தேதி நடைபெறுகிறது
  • இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சியில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக தலைமையில் பாரதிய ஜனதா, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ,பாட்டாளி மக்கள் கட்சி, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி என பல கட்சிகள் கூட்டணியில் சேர்ந்துள்ளது.

அதேபோல் திமுகவிலும் பல இடதுசாரி கட்சிகள் கூட்டணியில் சேர்ந்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் பாஜக வேட்பாளராக எச்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார் எப்போதும் சர்ச்சையில் சிக்கும் எச் ராஜா நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சிவகங்கை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.