ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா! கமலஹாசன் கண்டனம்…..

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டதற்கு கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி தரப்பில் ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.6,000 தரப்பட்டது என்று கூறியுள்ளார். சுயமாக வளர்ந்த சுயேட்ச்சை ரூ.2,000 தந்து ஒவ்வொவொரு ஒட்டுக்கும் விலை நிர்ணயம் செய்துள்ளார். மேலும் அதிக விலை நிர்ணயித்த சுயேட்சைக்கு பொத்தானை வாக்காளர்கள் அலுத்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். source: dinasuvadu.com

சென்னையில் மகனை காப்பாற்ற கால் டாக்சி ஓட்டுநரிடம் கட்டப் பஞ்சாயத்து செய்த பெண் ஆய்வாளர்!

தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவர், தனது குடும்பத்துடன் சென்னை சோழிங்கநல்லூரில் வசித்து கால் டாக்சி ஓட்டி வருகிறார். கடந்த 24 -ம் தேதி அன்று வாடிக்கையாளர் அழைப்பிற்காக அபிராமபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த மற்றொரு கார் பலமாக மோதியது. வங்கி கடன் பெற்று வாங்கிய தனது கார் சேதமடைந்ததால் அதிர்ச்சியடைந்த மைக்கேல் ராஜ் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த விபத்தை ஏற்படுத்திய தன்ஷீர், தனது நண்பர்களை செல்போனில் அழைக்க, … Read more

மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் : ரஜினி அரசியல் பற்றி திருமாவளவன் பேட்டி

ரஜினி அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ள நிலையில் அவருக்கு பலர் ஆதரவும், பலர் எதிர்த்தும் வருகின்றார். இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளார். அவரது அரசியல் வருகையை பற்றி கருத்து தெரிவித்து வரும் திருமாவளவன், தற்போது, ‘மக்கள் ரஜினிக்கு தகுந்த நேரத்தில் பாடம் கற்பிப்பார்கள். மேலும், திரை வெளிச்சம் மட்டும் போதும் என ரஜினி அரசியலுக்கு வந்துள்ளார்.’ என அவர் தெரிவித்தார். source : dinasuvadu.com

இளைய தளபதி விஜய் 62 அப்டேட்! சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் போட்டோ சூட்……

இளைய தளபதி  விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றவுள்ள டெச்னீசியன்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், சந்தானம் கலை இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்திற்கு தற்போது போட்டோ சூட் நடைபெற்றுவருகிறது. அந்த புகை படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் … Read more

ஜனவரி 12க்குள் சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவு!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜனவரி 12க்குள் சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோவுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஜனவரி 12ம் தேதி வரை விசாரணை ஆணையம் கால அவகாசம் அளித்துள்ளது.  ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் கடந்த நவம்பர் 22ம் தேதி முதல் இதுவரை 17 பேரிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். நேற்று இளவரசி … Read more

தினகரன் கன்னிப்பேச்சு பேசும்போது அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் இடைமறித்து பேசக்கூடாது!

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விரைவில் கூடவுள்ள சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பேரவையில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டி.டி.வி. தினகரன் பேசும் போது, பிரச்னை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என தெரிவித்தார். சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், … Read more

நான் ரஜினியின் கட்சியில் சேர்ந்தே தீருவேன் !கிளை தலைவர் பதவி ராஜினாமா …

லைகா நிறுவனம் 2.O படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆகும் .இந்த நிறுவனத்தின் இந்திய கிளை தலைவர் ராஜு மகாலிங்கம் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார்.இதன் காரணமாக அவர் தனது லைக்கா நிறுவனத்தில் கிளை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் . இந்தியாவிலும் லைக்கா தயாரிப்பு நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய கிளை தலைவராக ராஜூ மகாலிங்கம் செயல்பட்டு வந்தார். இவர் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினியின் 2.0 படத்தை … Read more

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 104 பேர் பங்கேற்பு!

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், எம்.எல்.ஏக்கள் 104 பேர் பங்கேற்றனர். பல்வேறு காரணங்களை கூறி ஏழு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடரில் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவையில் தினகரன் பேசும் போது, அமைதி காக்க வேண்டும் என எம்.எல்.ஏக்களை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரலில் உள்ளாட்சித் … Read more

அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்!

அதிமுகவில் அதிரடி மாற்றங்களை கொடுவந்துள்ளனர் அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் .அதிமுக கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தற்போது அறிவித்துள்ள செய்தி தொடர்பாளர்களை தவீர வேறு யாரும் பேட்டி அளிக்கக்கூடாது என்று தலைமை தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம் அதிமுக செய்தி தொடர்பாளர்களாக பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி, வைகைச்செல்வன், ஜே.சி.டி.பிரபாகர், சமரசம், மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், பேராசிரியர் தீரன், கே.சி.பழனிசாமி, ஏ.எஸ்.மகேஸ்வரி, பாபு முருகவேல் நியமனம் என்று தெரிவித்துள்ளது …   … Read more

நாங்களே ஆன்மீக அரசியல் கட்சிதான் ,ரஜினியின் ஆன்மீக கட்சி தேவை இல்லை!

ரஜினி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டாதோடு கூடவே ஆன்மீக அரசியல் என்று கூறியதால் பெரும் சர்சையாகி உள்ளது. இந்நிலையில்  தாங்கள் ஏற்கெனவே ஆன்மிக அரசியலில் இருப்பவர்கள் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினியை பா.ஜ.க. இயக்குவதாகவும், ரஜினியுடன் கூட்டணிக்கு ஏங்குவதாகவும் கூறுவதை ஏற்க முடியாது என்றார்.தாங்கள் ஏற்கெனவே ஆன்மிக அரசியலில் இருப்பவர்கள் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான … Read more