விசாரணை ஆணையத்தில் சுதா சேஷய்யன் ஆஜர்! ஜெ., மரணம் தொடர்பாக விசாரணை ….

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.5 அன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார். இந்நிலையில் அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஒரு நபர் … Read more

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!அடுத்தது என்ன ?

அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.. திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாக தகவல். கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்மரமாக ஈடுபட்டுள்ள நிலையில் சந்திப்பு நடக்கிறது.உடல்நலம் குறித்து விசாரிக்கவும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் கருணாநிதியை ரஜினி சந்திக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனேவே அவர் ஆளுங்கட்சியை விமர்சித்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது …. … Read more

ரஜினியின் அரசியலுக்கு காவலனாக வருகிறேன் : ராகவா லாரன்ஸ்

நடிகர் ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். விரைவில் கட்சி பெயரையும் சின்னத்தையும் அறிவிப்பதாக கூறினார். மேலும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவதாக கூறினார். நேற்று தனது அரசியல் குறித்த வலைதள பக்கத்தை டிவிட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வலைத்தளம் மூலம் ரசிகர்களை தனது வலைதளத்தில் அவர்களது வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு பதிய கேட்டுக்கொண்டுள்ளார். திரையுலகில் ரஜினிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ராகவா லாரன்ஸ் அவரும் தற்போது … Read more

தாய்பால் கொடுப்பதை கட்டாயமாக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்கபடவேண்டும் எனவும் பேறுகால விடுப்பின் போது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை விசாரிக்கையில் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தாய்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்க கூடாது எனவும், மேலும், பேறுகால விடுப்பின் போது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்கும் பழக்கம் ஏன் கட்டாயபடுத்தபடகூடாது. எனவும் கேள்வி எழுப்பினார். source : dinasuvadu.com

நாளை வேலைநிறுத்தம்!ஓலா, ஊபர் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம்….

ஓலா, ஊபர் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் போராட்டம் அறிவித்துள்ளது. மீட்டர் கட்டணம், நிலையான வருமானத்திற்கு அரசே வழி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நாளை வேலை நிறுத்தப் போராட்டம்  அறிவித்துள்ளது.ஓலாவால்  மற்ற ஓட்டுனர்கள் பாதிப்படைவதால் அதை கண்டித்து போராட்டம் … CITU உட்பட 5 மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு… source: dinasuvadu.com

விரைவில் நினைவிடம் ஆகிறது போயஸ் இல்லம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா இல்லம், அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து, கடந்த 30 ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில்,  அதிகாரிகள் நில அளவீட்டு பணிகளை தொடங்கினர். அடுத்தக் கட்டமாக, சமூக தாக்கம் குறித்து மூன்றாம் நபர் கொண்ட குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தேவைப்பட்டால் மக்கள் கருத்தும் கேட்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அந்த இடத்திற்கு உரிமை கோருபவர்கள் … Read more

பென் டிரைவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன்!

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஒவ்வொருவராகா ஆஜராகி விளக்கம் அளித்து வரும் நிலையில் தற்போது  தினகரன் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார்.ஆஜரானா பின்னர் அவர் கூறியது, என்னிடம் கொடுக்கப்பட்ட பென் டிரைவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன்.வெற்றிவேல் அவரிடம் இருந்த ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்துள்ளார் – வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.. source: dinasuvadu.com

பாலா இயக்கத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் குற்றபரம்பரையா?

பாலா தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசி நடித்திருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தின் பணியை வேகப்படுத்தியிருக்கும் பாலா குற்றப்பரம்பரை படத்தையும் இயக்க உள்ளாராம். வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையை பாலா இயக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் திடீரென்று பாரதிராஜா அதே கதையை மையமாக வைத்து படம் இயக்கி நடிப்பதாக தடபுடலாக படப்பிடிப்பு தொடங்கினார். ஆனால் சில மாதங்களில் அதன் … Read more

அதிமுகவில் பொறுப்பில் இருந்த டிடிவி ஆதரவாளர்கள் 9 பேர் அதிரடி நீக்கம்

ஆர்கே நகர் இடைதேர்தளுக்கு பிறகு அதிமுகவில் மாற்றங்கள் தினமும் நடந்து கொண்டு இருக்கின்றன. டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் தினமும் கனிசமான நபர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று அதிமுகவின் கட்சி பொறுப்பில் இருந்த கோதண்டபாணி, ஜெயந்தி, பத்மநாபன், கலைச்செல்வன், சுப்பிரமணியன், முத்தையா, உமா மகேஸ்வரி, மாரியப்பன், கென்னடி, சுந்தரராஜன் ஆகிய 9 பெரும் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது. source : dinasuvadu.com

கால்நடைகளை சாலைகளில் உலவ விட்டால் அபராதம்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….

சென்னையில் கால்நடைகளை சாலைகளில் உலவ விட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதுடன், பராமரிப்புக் செலவுக்கென 750 ரூபாய் வசூலிக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பிடித்து வைக்கப்படும் கால்நடைகளின் காதுகளில் சீரியல் எண்களுடன் கூடிய tag ஒட்டப்படும். இனி இதுபோன்று சாலைகளில் கால்நடைகள் அவிழ்த்து விடப்படமாட்டாது என 20 ரூபாய் முத்திரைத் தாளில் உரிமையாளர் எழுதி கொடுத்தால் மட்டுமே கால்நடைகள் விடுவிக்கப்படும். … Read more