ஓபிஎஸ்-யிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்க கூடாது – அப்போலோ எதிர்ப்பு!

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க அப்போலோ எதிர்ப்பு. ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை: ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க அப்போலோ மருத்துவமனை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வதிடம் விசாரணை நடத்தியது. அப்போது ஓபிஎஸ்-யிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டது. ஓபிஎஸ் வாக்குமூலம்: இதில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் … Read more

#Breaking:ஆறுமுகசாமி ஆணைய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

டெல்லி:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. மேலும்,ஆணையத்தின் செயல்பாடுகள்,மருத்துவக்குழு உள்ளிட்டவை பற்றி விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.

மதுசூதனின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – அதிமுக

மதுசூதனின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்  என அதிமுக ட்வீட். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் உறுப்புகளில் செயல்பாடுகள் சற்று குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக தரப்பில் ட்விட்டர் பக்கத்தில், ‘கழக அவைதலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் … Read more

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி..!தயார் நிலையில் உள்ள அப்பல்லோ,மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனைகள்…!

அப்பல்லோ,மேக்ஸ் மற்றும் ஃபோர்டிஸ் போன்ற தனியார் மருத்துவமனைகள் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி போட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,ஒவ்வொரு நாளும் 4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும்,3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.எனவே,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 முதல் 60 வயது வரை … Read more

#Breaking: நடிகர் ரஜினி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அண்ணாத்த படப்பிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றார். படப்பிடிப்பின்போது பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக … Read more

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, உடநலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், இன்று 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. இதனையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலரும் நலம் விசாரித்து வருகினறனர்.

அப்பலோ மருத்துவமனையில் திமுக பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் பொருளாளர் துரைமுருகன் ஆவார்.இவருக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் அனுமதிப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு  சிகிச்சை தரப்படுகிறது.மேலும்  இன்று மதியம் வீடு திரும்புவார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

“ஜெயலலிதா மரணம் நீங்கா சர்சை” நாற்காலியில் அமர்ந்தார் ஜெ…!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் ராஜ்பிரசன்னா ஆஜராகி தன்னுடைய தரப்பு விளக்கம் அளித்தார்.அப்போது அவர்  அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தபோது 59 நாள்களில் 120 முறை அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதா சக்கர நாற்காலியில் அமர்ந்தது குறித்த சர்ச்சை இன்றுவரை நீடித்துவரும் நிலையில், அதுகுறித்து தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ள ராஜ் பிரசன்னா, “நவம்பர் 9-ம் தேதி முதல் 13 -ம் தேதி வரையிலான பிசியோதெரபி … Read more

ஜெயலலிதா தொடர்பான அனைத்து வீடியோவையும் 7 நாட்களில் கொடுங்க..!!

சென்னை; மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி பதிவுகளை நிறுத்த உத்தரவிட்டது யார் என்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியதாகவும் மொத்த சிசிடிவி காட்சிகளை 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது. 40-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனா். அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை … Read more

ஜனவரி 12க்குள் சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவு!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜனவரி 12க்குள் சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோவுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஜனவரி 12ம் தேதி வரை விசாரணை ஆணையம் கால அவகாசம் அளித்துள்ளது.  ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் கடந்த நவம்பர் 22ம் தேதி முதல் இதுவரை 17 பேரிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். நேற்று இளவரசி … Read more