அப்பலோ நிர்வாகம் ஜெ. சிகிச்சை அளித்தது தொடர்பான ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தது!

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பான ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்தது அப்பலோ.. இரண்டு சூட்கேஸ்களில் மருத்துவ ஆவணங்களை கொண்டு சென்று விசாரணை ஆணையத்திடம் ஒப்படைத்தது அப்பலோ நிர்வாகம். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. விசாரணை ஆணைய உத்தரவை தொடர்ந்து ஜெயலலிதா சிகிச்சை ஆவணங்களை இரண்டு சூட்கேஸ்களில் கொண்டு சென்று தாக்கல் செய்தது அப்பலோ… இதற்கு முன் தமிழக அரசு ஜெயலலிதா சிகிச்சை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தது……அந்த அறிக்கையின் … Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் 5 பேருக்கு சம்மன் !விசாரணை ஆணையம் அதிரடி ….

ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன். பூங்குன்றன் வரும் 9 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் உத்தரவு. அப்பலோவில் ஜெயலலிதாவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம்தொடர்  விசாரணை.விசாரணையில்  சிகிச்சை முறைகள், பயன்படுத்தப்பட்ட மருந்துகள் குறித்து கேட்டறிவதாக தகவல். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது .எனவே  பூங்குன்றன் வரும் 9ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது . மேலும்  ஜெயலலிதாவுக்கு … Read more

ஜனவரி 12க்குள் சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனைக்கு உத்தரவு!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜனவரி 12க்குள் சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோவுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. ஜனவரி 12ம் தேதி வரை விசாரணை ஆணையம் கால அவகாசம் அளித்துள்ளது.  ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் கடந்த நவம்பர் 22ம் தேதி முதல் இதுவரை 17 பேரிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். நேற்று இளவரசி … Read more

விசாரணை ஆணையத்தில் சுதா சேஷய்யன் ஆஜர்! ஜெ., மரணம் தொடர்பாக விசாரணை ….

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.5 அன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார். இந்நிலையில் அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஒரு நபர் … Read more

பென் டிரைவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன்!

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஒவ்வொருவராகா ஆஜராகி விளக்கம் அளித்து வரும் நிலையில் தற்போது  தினகரன் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார்.ஆஜரானா பின்னர் அவர் கூறியது, என்னிடம் கொடுக்கப்பட்ட பென் டிரைவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன்.வெற்றிவேல் அவரிடம் இருந்த ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்துள்ளார் – வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.. source: dinasuvadu.com

நீதிபதி ஆறுமுகசாமி கமிசன் முன்பு இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ஆஜர்!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா நேரில் ஆஜராகியுள்ளார். டி.டி.வி.தினகரன் ஆதரவளரான வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்ட போது அதற்கு கிருஷ்ணப்பிரியா கண்டனம் தெரிவித்தார். அந்த வீடியோவை எடுத்தது சசிகலா என்று தெரிவித்த கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா தனக்குப் பின்னால் இருக்கும் மருத்துவக் கருவிகளைப் பார்ப்பதற்காக அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இன்னும் பல வீடியோக்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். கிருஷ்ணப்பிரியாவுக்கு வீடியோ குறித்தும் ஜெயலலிதா சிகிச்சை … Read more