பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 86 புள்ளிகள் குறைந்தது..!

Apr 13, 2023 - 05:18
 0  1

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 86 புள்ளிகள் குறைந்து 60,306  ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,801 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய வர்த்தக நாளில் 60,364 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 86.47 புள்ளிகள் அல்லது 0.14% என குறைந்து 60,306 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 10.45 புள்ளிகள் அல்லது 0.059% குறைந்து 17,801 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,392 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,812 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்லே இந்தியா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஐடிசி லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இண்டஸ்இண்ட் வங்கி, விப்ரோ லிமிடெட், லார்சன் & டூப்ரோ, டாடா ஸ்டீல், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், ஐஷர் மோட்டார்ஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே இந்தியா, ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இண்டஸ்இண்ட் வங்கி, விப்ரோ லிமிடெட், லார்சன் & டூப்ரோ, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow