ரூ.5,000 தள்ளுபடி..ரூ.9,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்.! முதல் விற்பனைக்கு களமிறங்கிய ஒன்பிளஸ் ஓபன்.!

Oct 27, 2023 - 06:51
 0  1
ரூ.5,000 தள்ளுபடி..ரூ.9,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ்.! முதல் விற்பனைக்கு களமிறங்கிய ஒன்பிளஸ் ஓபன்.!

கடந்த அக்டோபர் 19ம் தேதி இரவு 7.30 மணியளவில் மும்பையில் நடைபெற்ற நிகழ்வில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ், முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை இந்தியா உட்பட உலகளவில் வெளியிட்டது. இதையடுத்து, இந்த ஸ்மார்ட்போன் விற்பனை அக்டோபர் 27ம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது ஒன்பிளஸ் ஓபனின் விற்பனையானது இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னதாக ஒன்பிளஸ் ஓபன் போன்ற வடிவமைப்புடன் ஒப்போவின் பைண்ட் என்3 எனப்படும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டு, அக்-22ம் தேதி விற்பனைக்கு வந்தது.

இந்நிலையில் ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

64 எம்பி கேமரா..5000mAh பேட்டரி.! சீனாவில் அறிமுகமாகும் விவோ ஒய்100 5ஜி..எப்போ தெரியுமா.?

டிஸ்பிளே

ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனில் 2440 x 2268 (2K) பிக்சல்கள் ஹைரெசல்யூஷன் கொண்ட 7.82 இன்ச் லிக்குய்ட் அமோலெட் எல்டிபிஓ 3.0 மெயின் டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 1 முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் ரெஸ்பான்ஸ் ரேட்டையும் கொண்டுள்ளது.

இதன் வெளிப்புறம் 2484 x 1116 (2K) பிக்சல்கள் ஹைரெசல்யூஷன் கொண்ட 6.31 இன்ச் சூப்பர் ஃப்ளூயிட் அமோலெட் எல்டிபிஓ 3.0 கவர் டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளே 10 முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் ரெஸ்பான்ஸ் ரேட்டையும் கொண்டுள்ளது.

டால்பி விஷன் ஆதரவுடன் வருவதால் படங்கள் பார்க்கும்போது சிறப்பான அனுபவம் கிடைக்கும் என்றும், ஸ்மார்ட்போன் மூடிய நிலையில் இருக்கும்போது, மெயின் மற்றும் கவர் டிஸ்பிளே ஆகிய இரண்டிற்கும் எந்த இடைவெளியும் இருக்காது எனவும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிராசஸர்

ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனில் அட்ரினோ 740 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 13 அடிப்படையில் இயங்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போனில் நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.2 உள்ளது. மேலும், இதில் 5ஜி சப்போர்ட், வைஃபை 7, வைஃபை 6இ, புளூடூத் 5.3 சைடு மௌன்ட்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் அலர்ட் ஸ்லைடர் போன்றவை உள்ளன.

ப்ரீமியம் ஃபினிஷ்..24 ஜிபி ரேம்..ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்..! ரியல்மீ ஜிடி சீரிஸில் புதிய வரவு.!

கேமரா

இதில் இருக்கக்கூடிய கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் சோனி லிடியா சென்சாருடன் கூடிய வட்ட வடிவ ட்ரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதன்படி, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் சோனியின் லிடியா-டி808 (Sony LYTIA-T808) சென்சார் கொண்ட 48 எம்பி மெயின் கேமரா உள்ளது.

மேலும், ஓம்னிவிஷன் ஓவி64பி (OmniVision OV64B) சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம், 6x சென்சார் ஜூம் கொண்ட 64 எம்பி டெலிஃபோட்டோ கேமரா, சோனி ஐஎம்எக்ஸ்581 (Sony IMX581) சென்சார் கொண்ட 48 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா ஆகியவை அடங்கும்.

இந்தியாவில் சோனியின் லிடியா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக உள்பக்கம் 20 எம்பி கேமரா மற்றும் வெளிப்பக்கம் 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி

245 கிராம் எடையுள்ள ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனில் அதிக நேரம் பயன்பாட்டிற்காக 4,805 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

இதனால் ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போன் பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் செய்ய 42 நிமிடங்கள் ஆகும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு நான்கு வருட ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஸ்டோரேஜ்  மற்றும் விலை

எமரால்டு டஸ்க் மற்றும் வோயேஜ் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியான ஒன்பிளஸ் ஓபன், 16 ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் + 512 512 ஜிபி யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் அறிமுகமானது. இந்த வேரியண்ட் ரூ.1,39,999 என்ற ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. தள்ளுபடி

ஒன்பிளஸ் ஓபன் போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.5,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும். அதோடு, ரூ.9,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் 12 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ வசதி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow