RBUdhayakumar: பதவியை ராஜினாமா செய்ய தயார்.. அண்ணாவின் பெயரை ஏன் சூட்டவில்லை? - ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

Sep 16, 2023 - 07:48
 0  1
RBUdhayakumar: பதவியை ராஜினாமா செய்ய தயார்.. அண்ணாவின் பெயரை ஏன் சூட்டவில்லை? - ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசியமுன்னாள் அமைச்சர் அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார், இன்றைக்கு காவிரி உரிமை நமது ஜீவாதார உரிமை. நாம் யாரிடமும் யாசகம் கேட்கவில்லை, யாரிடமும் பிச்சை கேட்கவில்லை. காவிரி ஒழுங்காற்றுக்குழு ஒரு பரிந்துரை செய்திருக்கிறது. 15 நாட்களுக்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது.

ஆனால், கர்நாடக முதலமைச்சராக இருக்கும் சித்தராமையா, அவரது கர்நாடக மக்களுக்காக, ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்கு தர முடியாது என்று சொல்கிறார். இதுபோன்று துணை முதலமைச்சர் சிவகுமார் கூறி வருகிறார். கர்நாடக அணையில் நீர் இருப்பதாய் பார்த்துதான் ஆய்வு செய்த பிறகு தான் உச்சநீதிமன்றம், காவிரி ஒழுங்காற்றுக்குழு இந்த பரிந்துரையை செய்துள்ளது. ஏதோ, நாம் யாசகம் கேட்பது போலும், பிச்சை கேட்பது போலும் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் தடித்த வார்த்தையில் மனம் புண்படுகின்ற வகையில் பேசி வருகிறார்கள்.

உரிய நீரை வழங்காததால் ஏற்கனவே கடைமடை பகுதிகளில் பயிர்கள் கருகி போய்விட்டன. இதுபோன்ற சூழல் இருக்கும் நிலையில், கர்நாடகவாதிகள் பேசுச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ப்பது போல் உள்ளது. இவற்றிற்கு மருந்து போடுவதற்கு கூட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு நேரமில்லை. விழா நடத்துவதற்கு தான் நேரம் உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக அம்மாவின் வரலாறு குறித்து ஸ்டாலினுக்கு நினைவு கூறுகிறேன்.

ஆனால், மவுன சாமியாக முக ஸ்டாலின் இருந்து வருகிறார் என விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதிகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது. எங்களுக்கு பதவி முக்கியமில்லை, மக்கள் வளர்ச்சி தான் முக்கியம். இதனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என்றும் என தெரிவித்தார்.

மேலும், மாதம் ரூ.1000 வழங்கும் உரிமை தொகை திட்டம் அண்ணாவின் பெயரை சூட்ட திமுக மறுப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் கருணாநிதி பெயர் மறுத்துவிட்டது என்றும் அதை நினைவூட்டும் வகையில் இதுபோன்ற பெயர் சூட்டும் விழாக்கள் நடத்தப்படுவதாகவும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விழாவை விமர்சித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow