ponmudi: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு - இன்று விசாரணை!

Sep 14, 2023 - 05:54
 0  1
ponmudi: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு - இன்று விசாரணை!

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக பொறுப்பில் இருந்த, தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பின் வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது பதியப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கானது வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், போதிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்யவில்லை, குற்றசாட்டுகள் நிரூபணம் செய்யவில்லை என கூறி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு அளித்தது. ஆனால், வேலூர் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.

இந்த சமயத்தில், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வைந்து மறுவிசாரணைக்கு எடுத்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் (லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு) இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது. இதன் காரணமாகவே வேலூர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளோம் என நீதிபதி தெரிவித்திருந்தார். இதையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த மாதம் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி, அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தானாக முன்வந்து எடுத்த வழக்கு கடந்த 7ம் தேதி மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பொன்முடி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை வைத்தது.

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடியை விடுவித்த வழக்கை, வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை வைத்து. லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கையை ஏற்று வேறு நீதிபதிக்கு மாற்றுவதா அல்லது தானே விசாரிப்பதா என முடிவெடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். வழக்கை தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு வைத்து யார் விசாரிப்பது என முடிவெடுக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கின் விசாரணையை செப்.14ம் தேதி இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்ட நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற உள்ளது. எனவே, வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றப்படுமா? அல்லது அவரே விசாரிப்பாரா என தெரிய வரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow