Pacharisi Payasam : பக்காவான பச்சரிசி பாயாசம் செய்வது எப்படி? அசத்தலான செய்முறை இதோ!

நம்மளுடைய வீட்டில் நல்ல நிகழ்வுகள் நடக்கும்போது அதனை இனிப்புடன் கொண்டாடுவதற்காக அடிக்கடி பச்சரிசி பாயாசம் செய்து அதனை சாப்பிட்டு அந்த நிகழ்வை கொண்டாடுவோம். அதுமட்டுமின்றி, ஏதெனும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றாலும் கூட அங்கு தயார் செய்துகொடுக்கும் பச்சரிசி பாயாசம் என்றால் பலருக்கும் பிரியம்.

எனவே, அதே திருமண விட்டு ஸ்டைலில் பக்காவான பச்சரிசி பாயாசம் செய்வது எப்படி என்று சிலருக்கு தெரியாது . அப்படி தெரியாதவர்களுக்காகவே நாங்கள் அதற்கு என்னென்ன தேவை என்பதையும், பச்சரிசி பாயாசம் செய்வதற்கான செய்முறையும் கீழே விவரமாக கொடுத்துள்ளோம். அதனை பார்த்து செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள் :

  • பச்சரிசி
  • பால் 1 லி
  • ஏலக்காய்
  • சர்க்கரை
  • முந்திரி
  • திராட்சை
  • பாதம்
  • தேங்காய்த்துருவல்
  • வெண்ணெய்

முதலில் ஒரு 1/2 கப் பச்சரிசியை நன்கு புடைத்து எடுத்து ஒன்றுக்கு இரண்டுமுறை நன்கு கழுவ  வேண்டும். அதன் பின்னர்  15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.பாயாசத்திற்கு அரிசி நன்கு குழைந்து இருப்பது முக்கியம் ஊறவைத்த அரிசியை பிரஷர் குக்கரில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குறைந்த அளவு நெருப்பில் இரண்டு விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்.சாதம் வெந்த பின்னர் அதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் .

இதனைத்தொடர்ந்து ஒரு கடாயில் 1 லிட்டர் பாலை நன்கு கொதிக்கவிட வேண்டும் .இப்பொழுது கொதிக்கொண்டிருக்கும் பாலில் வேகவைத்த சாதத்தை சேர்த்து கெட்டியாக வரும்வரை அடிப்பிடக்காதவாறு கிளறி விடவேண்டும்.அதன் பின்னர்  மிதமான வெப்பத்தில் 15 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.

இதையும் படியுங்களேன்- Paruppu Sadam : உங்க குழந்தைங்க சாப்பிட அடம் பிடிக்கிறாங்களா? இந்த பருப்பு சாதம் போதும் தட்டே காலி ஆகிடும்!

இப்பொழுது கொதித்த பாலில்  200 கி அளவில் கண்டன்ஸ்ட் மில்க் சேர்க்க வேண்டும். இந்த கண்டன்ஸ்ட் மில்க் உங்களிடம் இல்லை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தேவையான அளவு சர்க்கரை இதற்கு பதிலாக சேர்த்துக்கொள்ளலாம்.அடுத்தபடியாக இரண்டு டீ ஸ்பூன் நெய் தேவையான அளவு முந்திரி சேர்த்து வறுக்க வேண்டும் முந்திரி பொன்நிறமாக மாறும்பொழுது திராட்சையை சேர்த்து உப்பிய பின்னர் அதனை இறக்கிவிட வேண்டும் .

ஏற்கனவே செய்து வைத்திருக்கும் பாயசத்தில் சிறிதளவு ஏலக்காய் தூள்,குங்குமப்பூ,வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.இப்பொழுது சூடாக  சுவையயன பச்சரிசிபாயாசம் தயார்.நாம் இப்பொழுது புதிதாக தயார் செய்துவைத்திருந்த சாதத்தை பயன்படுத்தினோம்.ஆனால்  நம் வீடுகளில் முன்னதாகவே சமைத்த சாதம் இருந்தால் அதை பயன்படுத்தியும் பாயாசத்தை செய்யலாம்.