பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்; மத்திய அரசு ஆய்வு செய்ய இபிஎஸ் வலியுறுத்தல்.!!

Apr 23, 2023 - 08:25
 0  2

டெல்லி செய்தியாளர்களிடம் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 விநாடிகள் கொண்ட ஒரு ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் , அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் இணைந்து ரூ.30,000 கோடி சம்பாதித்துள்ளனர்.

அவர்களது முன்னோர்கள் கூட இந்த தொகையைசம்பாதிக்கவில்லை. அவர்கள் இருவரும் எப்படி இவ்வளவு பெரிய தொகையைகையாளப் போகிறார்கள்" என்று பேசுவது போல இருந்தது, இந்த ஆடியோ வெளியானதை தொடர்நது, எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் " நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும், ரூ. 30 ஆயிரம் கோடி தொடர்பான ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு விசாரிக்க நாங்கள் வலியுறுத்துவோம்" என கூறியுள்ளார்.

மேலும், இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக பழனிவேல் தியாகராஜன் " முழுக்க முழுக்க அந்த ஆடியோ போலியானது. அதற்கு தொழில்நுட்ப ரீதியாக என்னிடம் ஆதாரம் உள்ளது" என விளக்கம் கொடுத்திருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow