இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் – பேச்சுவார்த்தை தோல்வி..!

2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் சென்னையில்  பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் தொடக்கக் கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, செப்.28ல் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொருளாளர் கண்ணன்  அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், 2009ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் பெரிய வேறுபாடு உள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

செப். 28ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும். பேச்சுவார்த்தையில் காலம் தாழ்த்துவது போல் தெரிகிறது, அதனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.