இனி பாஸ்வேர்டுகளை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும்..! வெளியான அதிர்ச்சி தகவல்..!

Apr 14, 2023 - 06:08
 0  1

பயனர்களின் பாஸ்வேர்ட்களை எளிதில் கண்டுபிடிக்கும் ஏஐ (AI) தொழில்நுட்பம் உருவாக்கப்ட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட, பாஸ்காண் (PassGAN) எனும் தொழில்நுட்பத்தின் மூலம், 51% பாஸ்வேர்ட்களை ஒரு நிமிடத்தில் கண்டறிய முடியும் என, ஹோம் செக்யூரிட்டி ஹீரோஸ் எனும் நிறுவனம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை தங்களது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

பாஸ்காண் எப்படி வேலை செய்கிறது.?

ப்ரூட் ஃபோர்ஸ் (brute force) முறை போன்ற வழக்கமான பாஸ்வேர்ட்களை கண்டுபிடிக்கும் முறைகளைப் போலல்லாமல், மனித மூளை எப்படி இருக்கும் என்பதைப் போன்ற தரவுகளை பகுப்பாய்வு செய்து விளக்குவதற்கு இயந்திரங்களைப் பயிற்றுவிக்கும் நரம்பியல் வலையமைப்பை பாஸ்காண் உருவாக்குகிறது.

ஒரு மாதத்தில் 81 சதவீதம் :

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஹோம் செக்யூரிட்டி ஹீரோஸ் நடத்திய சமீபத்திய ஆய்வில், 15 மில்லியனுக்கும் அதிகமான கடவுச்சொற்களின் பட்டியலை வைத்து பாஸ்காணின் திறன்களை சோதித்தது. இந்த ஆய்வின் முடிவுகள் நிறுவனத்திற்கு அதிர்ச்சியை அளித்தது. பாஸ்காண் ஆனது 51 சதவீதம் பொதுவான கடவுச்சொற்களை ஒரு நிமிடத்திற்குள்ளும், ஒரு மணி நேரத்தில் 61 சதவீதமும், ஒரு நாளில் 71% சதவீதமும் மற்றும் ஒரு நாளில் மற்றும் ஒரு மாதத்தில் 81 சதவீதமும் கண்டுபிடிக்க முடியும்.

பயனர்கள் கவலைப்பட வேண்டுமா.?

பாஸ்காண் போன்ற தொழில்நுட்பம், தரவு மீறல் மற்றும் கடவுச்சொல் ஹாஷ்களின் தரவுத்தளங்கள் கசிந்தால் மட்டுமே கடவுச்சொற்களைக் கண்டறியும். கடவுச்சொல் ஹாஷ் என்பது பயனர்களின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டால், உங்கள் கடவுச்சொற்களை ஹேக்கர்கள் உடனடியாக பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு பதிலாக, அவர்கள் உங்கள் கடவுச்சொற்களின் மறைகுறியாக்கப்பட்ட "ஹாஷ்" க்கான அணுகலைப் பெறுவார்கள்.

எனவே, பாஸ்காண் உங்களது கணக்குகளை நேரடியாக ஹேக் செய்ய முடியாது. கேப்பிடல் மற்றும் சுமால் (Uppercase, Lowercase) எழுத்துகள், நம்பர் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்களுடன் குறைந்தபட்சம் 15 கேரக்டர்கள் கொண்ட பாஸ்வேர்ட்களை கண்டுபிடிக்க, இந்த Al-க்கு பல நூற்றாண்டுகள் வரை ஆகலாம் எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow