சாதியை பார்த்திருந்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராகியிருப்பேனா? – சசிகலா

நான் சாதியை பார்த்திருந்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராகியிருப்பேனா? என சசிகலா கேள்வி

சென்னையில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் வி.கே.சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சசிகலா பேட்டி 

அப்போது பேசிய அவர், கட்சியில் நான் எல்லோருக்கும் பொதுவானவர்; கால நேரம் வரும்போது அனைவரும் ஒன்றிணைவோம். ஓபிஎஸ் விவகாரத்தில் சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என தெரிவித்துள்ளார்.

நான் சாதியை பார்க்கவில்லை

அதிமுகவில் அனைவரும் ஒன்று சேரக்கூடாது என திமுக செயல் பட்டு வருகிறது. கொடநாடு வழக்கை அரசியலுக்காக திமுக பயன்படுத்தி வருகிறது. இந்த வழக்கு இப்போதைக்கு முடியாது. ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால் நிச்சயம் வழங்குவேன். மாநாட்டுக்கு அழைத்தால் அது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவில் நான் சாதியை பார்க்கவில்லை. நான் சாதியை பார்த்திருந்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராகியிருப்பேனா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment