ஜூலை 22இல் பொறியியல் கலந்தாய்வு.. 2 புதிய பாடப்பிரிவுகள்.! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.! 

Jul 13, 2023 - 07:07
 0  0
ஜூலை 22இல் பொறியியல் கலந்தாய்வு.. 2 புதிய பாடப்பிரிவுகள்.! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.! 

ஜூலை 22இல் பொறியியல் கலந்தாய்வு துவங்குகிறது எனவும் இந்தாண்டு 2 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

அண்ணா பல்கலைக்கத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் கலந்தாய்வு வரும் ஜூலை 22ஆம் தேதி துவங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஜூலை 22 முதல் ஜூலை 28வரையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு (விளையாட்டு உள்ளிட்ட மற்ற சிறப்பு இடஒதுக்கீடு) முதற்கட்ட கலந்தாய்வு துவங்கும் என அறிவித்துள்ளார்.

மேலும், ஜூலை 28 முதல், ஆகஸ்ட் 9ஆம் தேதிவரையில் முதற்கட்ட கலந்தாய்வும், ஆகஸ்ட் 9ஆம் தேதி  முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வும், 3வது கட்ட கலந்தாய்வு 22ஆம் தேதி ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரையிலும் நடைபெறும் எனவும் வழக்கமாக 4 சுற்றுகளாக நடைபெறும் பொது கலந்தாய்வு 3 சுற்றாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்ததாக, அண்ணா பல்கலைக்கழத்தில் கீழ் மொத்தமாக 430 கல்லூரிகள் உள்ளன என்றும், அதில் 1,57,378 இடங்கள் உள்ளன என்றும், சென்ற ஆண்டை விட இந்தாண்டு 3 ஆயிரம் இடங்கள் அதிகமாக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்ப்பட்டுள்ளது. அதற்காக 11,804 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்னன. இந்த இடஒதுக்கீடு சென்ற ஆண்டை விட அதிகம். அதே போல தொழிற்கல்வி பயின்றவர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளது. என்று குறிப்பிட்டார்.

இந்தாண்டு பொறியியல் பாடப்பிரிவில் இரண்டு பாடப்பிரிவுகள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார். ECE Advance technology . ECE Design and Technology எனும் பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 1,87,847 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 1,78,959 பேர் கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow