'நம்மைக் காக்கும் 48' - 2 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Nov 28, 2023 - 06:08
 0  0
'நம்மைக் காக்கும் 48' -  2 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கடந்த 2021-ஆம் ஆண்டு நம்மை காக்கும் 48 என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், திட்டம்விபத்து நடந்த 48 மணி நேரத்திற்குள், சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களுக்கான மருத்துவச் செலவுகளை இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கிறது.

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கைவிரித்த உச்சநீதிமன்றம்… அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உள்கட்ட அமைப்புகள் வசதி கொண்ட இதர தனியார் மருத்துவமனைகள் கண்டறியப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என அனைவருக்கும் தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படும்.

நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். இந்த நிலையில், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலம் பயன் அடைந்த 2 லட்சமாவது பயனாளியான ஐசக் ராஜா என்பவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow