வார தொடக்க நாளில் தங்கம் விலை கடும் சரிவு! இன்றைய நிலவரம்...

Oct 16, 2023 - 05:38
 0  0
வார தொடக்க நாளில் தங்கம் விலை கடும் சரிவு! இன்றைய நிலவரம்...

தொடர்ந்து 2 தினங்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கடுமையாக சரிந்துள்ளது.

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்த இரு நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

(16.10.2023) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,240க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5.530க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூ.77.50க்கும், கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ. 77, 500க்கும் விற்பனையாகிறது.

(14.10.2023) அன்றைய நாள் நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,440க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.5,555க்கும் விற்பனை ஆனது. அதேசமயம், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் ரூ.77க்கும், கிலோ வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow