கர்நாடகாவில் கனமழை எதிரொலி.! காவேரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு.!

Jul 24, 2023 - 05:00
 0  1
கர்நாடகாவில் கனமழை எதிரொலி.! காவேரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு.!

கர்நாடகாவில் கனமழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் காவேரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட குறைவாக பெய்த காரணத்தால் காவேரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்தது. இதனால் கூடுதல் தண்ணீரை திறக்க கோரி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை அதிகமாக பெய்து வருவதன் காரணமாக குடகு, மைசூர், மாண்டியா பகுதிகளில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாண்டியா பகுதியில் உள்ள அணையில் இருந்து காவேரி ஆற்றுக்கு 9,516 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 29,552 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது .

அதே போல கே.ஆர்.எஸ் அணையானது ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 95 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது . அதே பல கபினி அணைக்கும் நீர் வரத்து 20,714 அடியாக உயர்ந்துள்ளது. அணைகள் அதன் கொள்ளளவை வேகமாக எட்டி வருவதன் காரணமாக காவேரி ஆற்றுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 12,536 கன அடியாக உயர்ந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow