PSLV-C55: சிங்கப்பூர் செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி55..! நாளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய ஏவுகணையான பிஎஸ்எல்வி-சி55-ஐ நாளை விண்ணில் ஏவுகிறது.

இந்தியாவுக்கு தேவையான தகவல் தொடர்பு, வழிகாட்டு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் விண்ணில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி-சி55 என்ற ஏவுகணை மூலம் சிங்கப்பூரின் டெலியோஸ்-2 மற்றும் லுமெலைட்-4  என்ற செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்த உள்ளது.

முன்னதாக, சிங்கபூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில் இந்த ஏவுகணை ஏப்ரல் 22ம் தேதி, அதாவது நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலின் முதல் ஏவுதளத்தில் இருந்து மாலை 2.19 மணியளவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.TeLEOS-2-mission

 

டெலியோஸ்-2 :

வணிகரீதியாக செலுத்தப்படும் சிங்கப்பூரின் டெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் 24 மணிநேரமும், அனைத்து வானிலை குறித்த படங்களையும் படம்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ST இன்ஜினியரிங் உருவாக்கிய 741 கிலோகிராம் செயற்கைக்கோள், ஹாட்ஸ்பாட் கண்காணிப்பு மற்றும் மூடுபனி மேலாண்மை, விமான விபத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பலவற்றிற்குப் பயன்படுத்தக்கூடிய படங்களை வழங்கும் திறன் கொண்டது.

லுமிலைட்-4:

லுமிலைட்-4 செயற்கைக்கோள் ஏ*ஸ்டாரின் (A*STAR) இன்ஃபோகாம் ஆராய்ச்சி நிறுவனம் (I2R) மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையம் (STAR) ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. லுமிலைட்-4 என்பது உயர் செயல்திறன் கொண்ட விண்வெளியில் இயங்கும் VHF தரவு பரிமாற்ற அமைப்பின் (VDES) தொழில்நுட்ப விளக்கத்திற்காக உருவாக்கப்பட்டதாகும். இது சிங்கப்பூரின் கடல் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய கப்பல் சமூகத்திற்கு நன்மை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Comment