நீங்கள் சமைப்பதற்கு எந்த எண்ணெய் நல்லது என சந்தேகமா?அப்போ இந்த பதிவை படிங்க ....

Oct 16, 2023 - 05:44
 0  0
நீங்கள் சமைப்பதற்கு எந்த எண்ணெய் நல்லது என சந்தேகமா?அப்போ இந்த பதிவை படிங்க ....

தினசரி நாம் சமையலில் பயன்படுத்த கூடிய ஒரு முதன்மை பொருளாக எண்ணெய் உள்ளது .இதில் பலவகையான எண்ணெய் உள்ளது.அதில் எந்த எண்ணெய் நாம் உடலுக்கு சிறந்தது என இந்த பதிவில் காண்போம் .

காலையில் இட்லிப்பொடி தொடங்கி இரவு சமையல் முடியும் வரை  எண்ணெய் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது .ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 3-4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.அதாவது ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 500ml ஆயில் தேவைப்படுகிறது .உதாரணமாக ஒரு குடும்பத்தில் 3 நபர் இருக்கின்றனர் என்றால் மாதம் 1 .1/2 லிட்டர் ஆயில் பயன்படுத்தலாம் .

நம் தோல் வறட்சி ஆகாமல் இருக்க எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது .பொதுவாக நாம் ஒரு சில குறிப்பிட்ட எண்ணெய்களை மட்டுமே உணவில் பயன்படுத்துகிறோம் .நல்லஎண்ணெய் ,கடலைஎண்ணெய் ,தேங்காய் எண்ணெய் ,பாமாயில் ,ரீபைன் சூரிய காந்தி எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துகிறோம் .

இதில்  விட்டமின்ஸ் ,மினரல்ஸ் ,கொழுப்பு அமிலங்கள்  அதிகம் உள்ளது . நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் ,நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் என கொழுப்பு அமிலங்களை பிரிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்: 

92% கெட்ட கொழுப்பு உள்ளது.எனவே இந்த எண்ணையை மிக குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்த வேண்ண்டும்.இதய நோயாளிகள் தவிர்க்க வேண்டும் .உதட்டு புண்  ,கூந்தல் வளர்ச்சி ,சருமத்திற்கு மிகவும் நல்லது .வைட்டமின் இ அதிகம் உள்ளது இது நம் சருமத்திற்கு நல்லது .

பாமாயில் :

86% கெட்ட கொழுப்பு உள்ளது .தினசரி உணவில் பயன்படுத்த கூடாது .ஒரு வேலை பயன்படுத்தினால் காய்ந்த எண்ணெயில் புளிக்குள் சிறுது உப்பு சேர்த்து லெமன் மாதிரி செய்து எண்ணெயில் பொரித்து எடுத்து பயன்படுத்தவும் ,அல்லது கொய்யா இலைகளை போட்டு எடுத்து எண்ணெயை முறித்து விட்டு பயன்படுத்தலாம்.

கடலை எண்ணெய் :

18% தான் கெட்ட  கொழுப்பு உள்ளது .மீதம் அனைத்தும் நல்ல கொழுப்பு தான் நிறைந்துள்ளது .ஆகவே தினம்தோறும் சமையலுக்கு உகந்த எண்ணெய் ஆகும்

நல்லண்ணெய் :

15% தான் கெட்ட கொழுப்பு உள்ளது .உண்மையிலே இது நல்லண்ணை தான் ,அதனால் தான் இதன் பெயர் நல்லஎண்ணெய் என கூறப்படுகிறது .எலும்புக்கும் பற்களுக்கும் நல்ல உறுதியளிக்கும் .இதய நோய் வராமல் பாதுகாக்கும் .மெட்டபாலிசத்தை சீராக்கும் என ஏராமான நன்மை தர கூடியது .

ரீ பைன்ட் சூரிய காந்தி  எண்ணெய்:

11% தான் கேட்ட கொழுப்பு உள்ளது .வைட்டமின் இ  அதிகம் உள்ளது .ஆனாலும் இந்த எண்ணெயை சூடாக்கி தயார் செய்வதால் இதன் சத்துக்கள் கிடைப்பதில்லை .மேலும் ப்ரிசர்வ்வேட்டிவ்  சேர்க்கப்படுகிறது ,இதனால் சில பாதிப்புகள் ஏற்படும். தவிர்ப்பதே சிறந்தது .ரெபைன்ட்  மாற செக்கு எண்ணெய் பயன்படுத்தலாம் .

ஆலிவ் எண்ணெய் :

86% நல்ல கொழுப்பு உள்ளது .14% கேட்ட கொழுப்பு காணப்படுகிறது ,எனவே சமையலுக்கு மிக சிறந்த எண்ணெய் ஆகும் .இதயத்திற்கு மிக சிறந்த ஆயில் .ஆனால்  விலைதான் சற்று அதிகமாக இருக்கும் .நோயை விலை கொடுத்து வாங்குவதற்கு பதில் ஆரோக்கியத்தை விலைகொடுத்து வாங்குவது தவறில்லை .

நெய் :

60% கெட்ட கொழுப்பு உள்ளது .மிக குறைந்த அளவு சமையலில் சேர்த்து கொள்ளலாம் .இதன் விலையும் அதிகமாகும்.

ஆகவே நோயை விலை கொடுத்து வாங்குவதற்கு பதில் ஆரோக்கியத்தை விலைகொடுத்து வாங்குவது தவறில்லை .மரச்செக்கு எண்ணெய் ,நல்லஎண்ணை ,கடலை எண்ணெய் போன்ற எண்ணெய்கள் தான் சமையலுக்கு உகந்தது மட்டுமல்லாமல் நம் பொருளாதாரத்திற்கும் உகந்தததாகும் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow